தேவன் ஒரு மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத் தீர்ப்புக்குள் கொண்டு வருவதில்லை Jeffersonville, Indiana, USA 63-07-24 1. “பதினாயிரம் தேவதூதர்களைக் கூப்பிட்டிருக்கலாம், இவ்வுலகை அழிக்க ஒருவன் போதும்; ஆனால் அவர் உனக்காகவும் எனக்காகவும் மரித்தார். கர்த்தருக்கு சித்தமானால், இதைப் போன்ற ஒரு அடிப்படையில் ஞாயிறு காலையில் ”கிறிஸ்து யார்?“ என்பதைக் குறித்து என் செய்தியை அளிக்க விரும்புகிறேன் (கிறிஸ்து தேவனுடைய பரம ரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார், உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 3, எண்: 7- ஆசி). ஞாயிறு காலையில் இந்த சிறு பெண்கள் அந்தப் பாடலை நமக்காக மறுபடியும் ஒருவேளை பாடக் கூடும் என்று நாம் எதிர் நோக்கியிருக்கிறோம். சகோ. வீலர், நீர் நிச்சயம் அங்குள்ள இரு சிறு சீமாட்டிகளைப் பெற்றிருக்கிறீர் என்று உறுதியாக கூற விரும்புகிறேன். அவர்கள் உடுத்தியுள்ள விதமும்; எவ்வித அழகுபடுத்தும் சாதனைங்களையும் உபயோகிக்காமலும் உள்ளனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக எனக்கு காணப்படுகின்றனர், அவர்கள் கிறிஸ்தவர்களைப் போல் பாடுகின்றனர், கிறிஸ்தவர்களைப் போல் நடந்து கொள்கின்றனர். அது மிகவும் அருமையானது. 2 அன்றொருநாள் என் மனைவியிடம் நான், நாம் நிச்சயமாக சுத்தமாக காணப்படும் ஒரு கூட்டம் ஸ்திரீகளை இங்கு பெற்றுள்ளோம் என்று கூறினேன் என்று நினைக்கிறேன். அதை நான் மெச்சுகிறேன். அவர்களுடைய நீண்ட கூந்தலும் சுத்தமான முகங்களும் ஒழுக்கமாக உடை உடுத்தியிருத்தலும், ஒவ்வொரு முறை நான் உள்ளே வரும் போதும் உங்களை நான் பாராட்டுகிறேன். நான் மேடாவிடம், “என்றாவது ஒரு நாள் இவர்களை வரிசையாக நிறுத்தி புகைப்படம் எடுத்து, நமது சபை எவ்வாறு உள்ளதென்று மற்ற சபைகளுக்கு காண்பிக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நாம் இவைகளை இங்கு கூறும்போது, அவர்கள் கீழ்ப்படிகின்றனர். அது நமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. அது நமக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. நமது விண்ணப்பங்களை நாம் ஏறெடுக்கும் போது, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம் (1யோவான்: 3:21-22). 3 இன்று காலையில், வெகு தூரத்தில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் சில நிமிடங்களில் மரித்துப் போவாரென்று எண்ணி, கட்டிலில் கிடந்திருந்த அவரை இழுத்துப் போட்டார்கள். அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டார்கள். அது ஏறக்குறைய விடியற்காலம். நான் படுக்கையைவிட்டு எழுந்து, தரையில் முழங்கால்படியிட்டு அந்த வயோதிபருக்காக ஜெபம் செய்யத் தொடங்கினேன். தேவனுடைய கிருபையால் அந்த ஆவியுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. அது இங்கே திரும்பவும் வந்தது. அவர் சுகமடைந்து, இங்கு மறுபடியும் வந்திருக்கிறார். தேவனுடைய மகிமைக்கென்று அவர் இன்றிரவு நம்முடன் உயிருள்ளவராக இருக்கிறார். அவர் தான் தொண்ணூற்றொன்று வயதுள்ள வயோதிபனான சகோ. டெள (Brother Dauch). அவருடைய வாழ்க்கை பயணத்தின் காலத்தைக் கடந்து இருபத்தோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. கர்த்தர் நல்லவரும் மிகுந்த கிருபையுள்ளவருமாயிருக்கிறார். அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 4 இப்பொழுது, சகோ. நெவில், நாம் சுற்றுமுற்றும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், எனக்கு இன்றும் சிறிது... இங்கு இன்னும் ஒரு ஆராதனை எனக்கு இருக்கிறது என்று அறிவேன். அது ஞாயிறன்று. என் போதகரின் நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர் பிரசங்கிப்பதைக் கேட்க எனக்கு மிகுந்த ஆவல். ஞாயிறு இரவு அவர் பிரசங்கித்து முடித்த பின்பு, 'சாண்ட்விச்' உண்பதற்காக என் நண்பருடன் இந்த சிறு 'ட்ரைவ் இன்' (Drive-in) உணவு விடுதிக்கு சென்றிருந்தேன் - சகோதரன் மற்றும் சகோதரி ஈவான்ஸ் அவர்களுடன், அங்கு சகோதரன் மற்றும் சகோதரி சாத்மன் அவர்களைச் சந்தித்தோம். சகோ. சாத்மனும் மற்ற அனைவருமே அவரளித்த அந்த அருமையான செய்தியைக் குறித்து பேசிக் கொண்டனர். ஏறக்குறைய அந்த முழு வாரமே அதன் பேரில் நான் தியானித்துக் கொண்டிருந்தேன் என்று உங்களிடம் கூற விரும்புகிறேன். எவ்வாறு நெருப்புக் கோழி தன்னை மறைத்துக் கொண்டுவிட்டது என்று எண்ணுகிறது போன்ற சில காரியங்களை அவர் குறிப்பிட்டது. அது உண்மை. நெருப்புக் கோழி தன் தலையை தரையில் புதைத்துக் கொள்ளும் போது, அதன் உடல் பெரும்பாலும் வெளியே தான் உள்ளது. சில சமயங்களில் நாம் அப்படித்தான் செய்கிறோம். ஏதாவது ஒன்றன் பின்னால் நமது தலையை மறைத்துக் கொள்ளப் பார்க்கிறோம், அங்கே எப்பொழுதும்... நம்மை வெளியே காட்டிக் கொண்டிருக்கக் கூடும். தேவன் நமது எல்லாவற்றையும் காண்கிறார், பாருங்கள். அவர் கூறினதை நான் பாராட்டுகிறேன். 5 பிறகு நான் எண்ணினேன், நல்லது, சபையிடம் சிறிது பேசலாமே என்று நான் எண்ணினேன், நல்லது, நான் - நான்... சகோ. நெவிலுக்கு எல்லா நேரங்களிலும் உங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கின்றது. இங்கு நான் உள்ள போது, சபைக்கு வரலாமே என்று. இங்கு சபை திறந்திருக்கும் போது, நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு மாய்மாலக்காரனாயிருக்க விரும்பவில்லை... உங்களை நான் நேசிப்பதனால், இங்கு வர விரும்புகிறேன். இதை உங்களிடம் கூறுகிறேன், எனக்கு நிச்சயமாக ஒருவிதமான... இங்குள்ள சீதோஷ்ண நிலை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான்... இந்த இடம் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இங்கு அடிக்கும் காற்றினால் எனக்கு 'அலர்ஜி' (allergy) உண்டாகிறது. அந்த காற்று என் மேல் பட்டவுடனே சருமத்தில் சினைப்பு உண்டாகிறது. அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. நான்... இங்கிருக்கும் போது எங்கள் யாருக்குமே சுகம் தோன்றுகிறதில்லை. நாங்கள்... இங்கு வந்த முதற்கொண்டு, எங்கள் யாருக்குமே நல்ல சுகம் இல்லை. ஏனெனில் அந்த உஷ்ணமான சீதோஷ்ண நிலை எங்களுக்கு பழக்கமாகிவிட்டது. 6 ஆனால், இப்பொழுது, என்னை இங்கு இழுத்துக் கொண்டு வருவது நீங்கள் எல்லோருமே, உங்களுக்குத் தெரியும், எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் நினைக்கிறேன் எனக்கு... நான் தனிப்பட்ட விதத்தில் அறிந்துள்ளவர்களை கணக்குப் பார்த்தால், அது உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கானவர்களாக இருக்கும். நான் தனிப்பட்ட விதத்தில் அறிந்துள்ளவர்களை ஒருவர் கணக்கிட்டார். அது ஏறக்குறைய ஒரு கோடி மக்கள். ஆனால் நாம் வாழும் இடத்தைக் குறித்தும், பிரத்தியேகமான சிலரைக் குறித்தும் விசேஷமான ஒன்றுண்டு. அது எல்லோருக்கும் உண்டு. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு விசேஷமானவர்கள் இருப்பார்கள் அதில் எனக்கு நம்பிக்கையுண்டு. அப்படி இல்லாமல் போனால், நமது மனைவி நமக்கு ஏன் விசேஷித்தவளாக இருக்க வேண்டும்? ஏன் நமது... பாருங்கள்? நாம்... நமது மனைவிகள், கணவன்மார்கள் போன்றவர்கள் அவர்கள் சிறப்பானவர்கள். அது போன்று நண்பர்களிலும் சிறப்பானவர் உள்ளனர். அவர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவ நீங்கள் ஆவல் கொள்கின்றீர்கள். இந்த குறிப்பான சிறு இடங்கள். இந்த சபைக் கட்டிடம் இப்பொழுது நின்று கொண்டிருக்கிற அந்த பழைய சதுப்பு நிலம் என் நினைவுக்கு வருகிறது. இது கட்டப்படுவதற்கு முன்பு அது ஒரு குளமாக இருந்தது. ஆகையால் தான் இந்த குளத்தை அடைவதற்கான வீதி சற்று தள்ளி உள்ளது. இது தான் நிலம், வீதி அந்த கதவு வரைக்கும் வருகிறது. இது ஒரு குளமாக இருந்தது. நான் இளைஞனாக இருந்தபோது, கர்த்தருக்கென்று ஒரு சபைக் கட்டிடத்தை எழுப்ப ஒரு இடத்தைத் தேடி இங்கு அலைந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. 7 இந்த இளைஞனும் அங்குள்ள மற்றவனும் சற்று முன்பு உற்சாகத்துடன் ஜெபித்ததைக் கேட்டேன். “நானும் கூட இவ்விதம் மூச்சுவிடாமல் ஜெபிப்பது வழக்கம்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் உங்களுக்கு வயதாகும் போது, நீங்கள் வேகத்தைக் குறைத்து மெதுவாக இயங்குகின்றீர்கள். ஆயினும் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள், ஆனால் “இரண்டாம் கியரில்” (second gear) மெதுவாக ஓட்டிச் செல்கின்றீர்கள். அப்படித் தான் நான் சகோ. உட்ஸிடம் அங்கு கூறினேன். அதன் பிறகு... சிறிது கழிந்தவுடன், உங்களுக்கு எழுத்து அல்லது எண்பது வயதாகும் போது நீங்கள் மிகவும் வேகம் குறைந்த கியருக்கு (low gear) மாற்றி ஓட்டிச் செல்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியுமா... இருந்த போதிலும் நீங்கள் சென்று கொண்டேயிருக்கிறீர்கள். நீங்கள் சென்று கொண்டிருக்கும் வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்? அங்கு சென்றடைவதற்கு இன்னும் சிறிது நேரம். 8 இந்த பிரசங்கப் பீடம் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்தில், புற்களின் மத்தியில் நான் ஊக்கமாக ஜெபித்தது என் நினைவுக்கு வருகிறது. பிரசங்க பீடத்தை எங்கு வைக்க விரும்பினேனோ, அந்த இடத்தில் ஒருமுளையை அடித்து நட்டேன். தேவனாகிய கர்த்தர் இந்த இடத்தை எனக்குத் தந்தார். ஆம், ஐயா. இப்பொழுது இந்த மூலைக்கல்லில், அதை நாட்டின் அன்று காலையில் எனக்கு கிடைக்கப் பெற்ற தரிசனத்தின் சாட்சி வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர், “இது உன் கூடாரம் அல்ல, நீ சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” என்றார். நான் பார்த்த போது, முழு உலகத்தையும், பிரகாசமான நீலநிற ஆகாயத்தையும், ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வருகிறதையும் கண்டேன்; அது மூலைக்கல்லில் வைக்கப்பட்டுள்ளது. தரிசனம் அவ்வாறு உரைத்த போதிலும், அது நடக்குமென்று நான் நினைக்கவேயில்லை. ஆனால் தரிசனங்கள் ஒருபோதும் தவறுவதில்லை; அது எப்படியும் நிறைவேறும். 9 இந்த வாரம் நான் அநேக பேட்டிகளில் கலந்து கொண்டேன். ஏனெனில் ஞாயிறன்று, கர்த்தருடைய கிருபையுள்ள பிரசன்னம் இறங்கி வந்தது. நான் திங்களன்று இவ்விடம் விட்டுசென்றிருக்க வேண்டும். நான்... நாங்கள் இன்னும் விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லை, பிள்ளைகள் என் விடுமுறை சிறிது கழிந்தே வரும். ஆனால் சில நாட்களுக்கு என் பிள்ளைகளை எங்காவது கொண்டு செல்ல விரும்புகிறேன். அவர்கள் வீடு திரும்பி, பள்ளிக்குச் செல்ல வேண்டும். எனவே அவர்களை கொண்டு செல்ல இந்த வாரம் ஒரு நல்ல தருணமாயிருக்கும் என்று எண்ணினேன். அடுத்த வாரம் சிக்காகோவில் நடக்கும் கூட்டத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் ஆவியின் அபிஷேகம் தங்கியிருந்ததால், “பேட்டிகள் நடத்துவதற்கு அதுவே ஏற்றதருணம்” என்று கருதினேன். இந்த நேரத்தில் தான்... அவர்கள் சிலருடன் ஈடுபடலாம். அங்கு... அந்த அறையில் இருந்த சிலர் இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். கர்த்தர் எங்களைச் சந்தித்தாரா இல்லையாவென்று அவர்களுக்குத் தெரியும். 10 விசித்திரமான காரியம் என்னவெனில்... பேட்டிக்கு சற்று முன்பு காலியான இடங்களில் பில்லி உட்கார வைத்த சில ஸ்திரீகளைத் தவிர மற்ற ஒவ்வொருமே; ஏதோ ஒரு ஸ்திரீ லூயிலில்லில் இருந்து வந்திருந்தாள், அவள் ஒரு சிறு பெண்ணைக் கூட கொண்டு வந்திருந்தாள். அவர்கள் லூயிவில்லில் உள்ள 'தேவ சபையை' (Church of God) சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருடைய விஷயத்தையும், நான் வீட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் என்னிடம், யாரெல்லாம் அங்கு வந்திருப்பார்கள் என்றும், அவர்கள் என்ன கேட்பார்கள் என்றும் வெளிப்படுத்தினார். அவைகளை நான் ஒரு காகிதத் துண்டில் எழுதிக் கொண்டு, அவர்கள் என்ன கேட்பார்கள் என்றும், அந்த கேள்விகளை எந்த விதமாக கேட்பார்கள் என்றும், அவைகளுக்கு எவ்விதம் பதில் கூறப்படும் என்றும் கூறினேன். நான் அவர்களிடம், “இது தான் நீங்கள் கேட்கவிருந்த... இப்பொழுது பாருங்கள், சில நிமிடங்களுக்கு முன்பாக பரிசுத்த ஆவியானவர் என்ன...” என்று சொல்லி மேசையின் மேலிருந்த காகிதத் துண்டை கையை நீட்டி எடுத்து, “பார்த்தாயா? நீ வருவதற்கு முன்பே அவர் என்னிடம் இதை கூறினார்” என்று கூறினேன். பாருங்கள்? நான் வீட்டில் இருந்த போது, யார் அங்கே இருப்பார்கள் என்றும், அது எவ்விதம் இருக்கும் என்றும், அவர்களுடைய மனப்போக்கு எவ்விதமாய் இருக்கும் என்றும், அதைக் குறித்து எல்லாமே, நான் வீட்டை விட்டுப் புறப்படும் முன்னர் என்னிடம் கூறப்பட்டது. 11 அநேக சமயங்களில் நான், சாலையின் வழியாக ஜெபித்துக் கொண்டு வரும் போது, அந்த ஜெபவரிசை எனக்கு முன்னால் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். அங்கு நான். அடைவதற்கு முன்பே, ஜெபவரிசையில் உள்ள ஒவ்வொருவரின் பெயரையும் நான் முன்கூட்டியே அறிந்து கொள்வேன். அது உண்மை. அவர்கள் சபையில் எந்த இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள் என்றும்... அவர்கள் எவ்விதம் உடுத்தியிருப்பார்கள், அவர்கள் எவ்விதம் காணப்படுவார்கள் என்றெல்லாம் எனக்கு முன்கூட்டியே தெரியும். இவைகளையெல்லாம் நான் ஜனங்களிடம் சொல்வதில்லை. நீங்கள் நடக்கும் இக்காரியங்களை அவர்களிடம் கூறுவதில்லை, அவர்களிடம் கூறவேண்டிய அவசியமும் இல்லை. ஜனங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நான் கருதுபவைகளையே நான் கூறுகிறேன். “இதை சொல்” என்று தேவன் அவர்களிடம் கூற வேண்டியவைகளை என்னை நெருக்கி ஏவுவதையே நான் கூறுகிறேன். நான் காணும் எல்லாவற்றையும் சொல்லமாட்டேன். ஏனெனில் அது சரியல்ல, பாருங்கள், நீங்கள்... நீங்கள் தொல்லையில் மாட்டிக் கொள்கிறீர்கள் என்பது உண்மைதான். கர்த்தருடைய ஆவியினால் இவைகளை எவ்விதம் கையாள வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 12 சில சமயங்களில் ஜனங்கள் எனக்கு முன்னால் நின்று கொண்டு என்னை கேள்விகள் கேட்பார்கள், அது என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவர்களிடம் கூறுவதில்லை, ஏனெனில் அவ்விதம் செய்யக் கூடாது என்னும் தடை உணர்ச்சி என்னில் உண்டாகின்றது. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, நான் கட்டுண்டவன் என்பதன் பேரில் பிரசங்கித்தேன், அது சென்ற புதன் இரவு என்று நினைக்கிறேன் (“உரைக்கப்பட்ட வார்த்தை” வால்யூம் 2, எண்: 8 -ஆசி). பாருங்கள்? அந்த நபரிடம் நீங்கள் கூற வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒன்று “அதை செய்யாதே” என்று கூறுகிறது. ஆவியானவர், “அதை செய்யாதே, அதை செய்யாதே” என்று கூறுகிறார். இருப்பினும் அந்த வரம் அதை நேராக நோக்கிக் கொண்டிருக்கிறது, பாருங்கள். “அதை செய்யாதே, அதை செய்யாதே” பாருங்கள், எனவே அதை செய்யாமலிருப்பது நலம்; இல்லையெனில் நீங்கள் தேவனிடம் தொல்லையில் அகப்பட்டுக் கொள்வீர்கள். 13 இப்பொழுது, இங்கு நின்று கொண்டிருப்பதற்காக இன்றிரவு நாம் வரவில்லை. நாம் கர்த்தருடய வார்த்தையைக் கேட்க விரும்புகிறோம். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், நமக்கு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. நான் இங்கு வரும்போதெல்லாம் நான் பிரசங்கப் பொருள்கள் அடங்கிய சிறு புத்தகத்தை என்னுடன் கொண்டு வருவதுண்டு. ஏனெனில் அங்கு... சில நேரங்களில் சகோ. நெவில் மிகவும் அன்புள்ளவராய், “இதை செய்வீர்களா, அதை செய்வீர்களா? பேசுவீர்களா?” என்று என்னைக் கேட்டுக் கொண்டேயிருப்பார். அப்பொழுது நான் புத்தகத்தைத் திறந்து பிரசங்கத்துக்கான ஏதோ ஒரு பொருளைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொடங்குவேன். நான் நிச்சயமாக... ஞாயிறன்று நிச்சயம் வாருங்கள். இப்பொழுது, எனக்குத் தெரியாது... நமக்குத் தெரியாது. நம்மால் கூற இயலாது. பாருங்கள், சில நேரங்களில் நான் பேச நினைத்த பொருளை மனதில் கொண்டவனாய் இங்கு வந்து, அதை முற்றிலும் மாற்றியிருக்கிறேன். நான் வேத வாக்கியங்களை எழுதி வைத்துக் கொண்டு “பிரசங்கத்துக்காக இந்தப் பொருளை உபயோகிக்கப் போகிறேன், இந்த வேத வாக்கியங்களை உபயோகிக்கப் போகிறேன். நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, இதை, அதை, மற்றதை கூறப் போகிறேன்” என்று நினைத்துக் கொள்வேன். உதாரணமாக 1கொரி. 5:15, 2கொரி. 7:11, மத். 28:16 என்று எழுதி வைத்துக் கொள்வேன். அந்த வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறதென்று எனக்குத் தெரியும். ஆனால் அவைகளைத் தொடாமலேயே முற்றிலும் வித்தியாசமாக பிரசங்கித்த நேரங்கள் உண்டு. எனவே என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது, 14 எனவே,கர்த்தருக்குச் சித்தமானால், நடந்து வரும் தொடர் ஆராதனைகளை முடிக்கும் வகையில், ஞாயிறு காலையின் போது ஒரு முக்கியமான காரியத்தின் பேரில் பேச விரும்புகிறேன். எனவே அன்று நேரத்தோடு வாருங்கள், சற்று தாமதித்து தங்குவதற்கு ஆயத்தமாக வாருங்கள் - ஒருவேளை இரண்டு மணி வரைக்கும். எனவே அது... அந்த பொருளின் பேரில் ஏற்கனவே முப்பது அல்லது நாற்பது வேதவாக்கியங்களை குறித்து வைத்திருக்கிறேன்; ஆனால் நான் நினைப்பது என்னவெனில்... நான் என்ன செய்ய முயல்வேன் என்றால், பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவி செய்வாரானால், தற்பொழுது செய்தியும் இடமும் எங்குள்ளது என்பதை கிரகித்துக் கொண்டு, அது தொடங்கின இடத்திலிருந்து படிப்படியாக தற்காலம் வரைக்கும்... எடுத்துரைக்க விரும்புகிறேன். 15 நான் சிக்காகோவுக்குப் புறப்பட்டுச் சென்று, அதன் பிறகு அரிசோனாவுக்குச் சென்று, பிறகு பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். எனக்குத் தெரிந்த வரைக்கும், இந்த கூடாரத்துக்கு நான் மறுபடியும் வருவது, ஒருவேளை அடுத்த ஆண்டாக, அடுத்த கோடை காலத்தின் போது இருக்கலாம். ஏனெனில் எனக்கு கூட்டங்கள் உள்ளன - இவ்வழியாக கடந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு முன்பு வரக் கூடும். பில்லி தற்பொழுது, கிறிஸ்துமஸுக்குப் பிறகு உடனே நான் மேற்கொள்ள வேண்டிய உலக பயணத்துக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறான். டிசம்பர் வரைக்கும் கூட்டங்களுக்காக முன்னேற்பாடு செய்யப்பட்டுவிட்டது - டிசம்பர் முதலாம் வாரத்தில் டல்லாஸில் நடை பெறும் கூட்டம் வரைக்கும். அதன் பிறகு ஜனவரி மாதத்தில் நாங்கள் முழு உலகப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். கர்த்தர் எங்கே நடத்துவார் என்பதை அறிந்துகொண்டு, அதற்கான திட்டத்தை தற்பொழுது தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஜனங்களுக்கும் போதகர்களுக்கும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன் - அவர்களுடைய ஸ்தாபனங்களுக்கு விரோதமாக நான் பிரசங்கம் செய்கின்ற போதிலும். 16 இப்பொழுது அங்குள்ள புத்தகங்களின் வாயிலாக, சகோ. ராய் பார்டர்ஸ் எனக்கு வரும் அழைப்புகளை கவனித்துக் கொள்கிறார். சென்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடங்கி, உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. எனவே நான் எந்த இடத்துக்கு செல்ல வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் கர்த்தர் தான் என்னை வழி நடத்த வேண்டும். நாங்கள் அவரையே சார்ந்திருக்கிறோம். எல்லா அழைப்புகளுக்கும் இணங்குவது இயலாது. ஒரு கோடைகாலத்தில் எட்டு அல்லது பத்து கூட்டங்களுக்கு மேல் நடத்த முடியாது - நீங்கள் ஒரு இரவு ஒரு இடத்துக்கும், ஒரு இரவு மற்றொரு இடத்துக்கும் சென்றாலொழிய, அவர்கள் இரண்டு மூன்று வாரங்களுக்கு கூட்டங்களைக் கேட்கிறார்கள், அல்லது என்னால் எவ்வளவு நாட்கள் தங்கி நடத்த முடியுமோ; சிலர், “கர்த்தர் உங்களை நடத்தும் வரைக்கும் அத்தனை நாட்கள்” என்று எழுதியுள்ளனர். எனவே எங்கே தொடங்க வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை. எனவே நாங்கள் கர்த்தருடைய முன்னிலையில் இவைகளை வைத்து, “பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்குத் தெரிவியும்” என்கிறோம். இந்த விஷயத்தில் உங்களுடைய ஜெபத்தினால் எனக்குதவி செய்யுங்கள். இதற்கு தீர்வு காண்பதற்கு உங்களுடைய ஜெபத்தினால் எனக்குதவி செய்யுங்கள். 17 சென்ற ஞாயிறு சுகமளிக்கும் ஆராதனை நடத்தின பிறகு, இந்த ஞாயிறு நாம் போதனையை எடுத்துக்கொண்டு, நாம் வாழும் நேரம் என்னவென்றும், நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டி, உலகத் தோற்றத்துக்கு முன்பு தேவன் தம் சிந்தையில் கொண்டிருந்த மூவகையான திட்டத்தின் நோக்கம் என்ன என்பதிலிருந்து தொடங்கி, இன்று வரைக்கும் என்ன நடந்துள்ளது என்பதை எடுத்துக் கூறலாம் என்று எண்ணியுள்ளேன். இப்பொழுது நான் அந்த திட்டத்தின் இரண்டாம் பாகத்தின் மேல் கவனம் செலுத்தி, அதற்குரிய வேத வாக்கியங்களை தேடிக் கண்டுபிடித்து, அவைகளை சரியான இடத்தில் பொருத்தி வருகிறேன். இப்பொழுது சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். 18 கர்த்தராகிய இயேசுவே, ஆடுகளின் மகத்தான மேய்ப்பனே, உமது மிகுந்த கிருபையுள்ள, பரிசுத்த நாமத்தினால் இன்றிரவு நாங்கள் இங்கு கூடி வந்துள்ளோம். கர்த்தாவே, உம்மை நாங்கள் நேசிக்கிறோம். இன்றிரவின் ஜெபக் கூட்டத்துக்காகவும் சபையின் துதிப்பாடல்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் இருதயத்தில் களிப்புள்ளவர்களாய் அவைகளை நாங்கள் பாடினோம். கைகளைக் கொட்டி அவைகள் பாடப்படுவதை உள்ளே வரும்போது கேட்டோம். அதன் பிறகு நாங்கள் முழங்கால்படியிட்டு, எங்கள் இருதயங்களை உமக்கு முன்பாக ஊற்றி, எங்களுக்கு நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி, எங்களுடன் நீர் தொடர்ந்து நடக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொண்டோம். இப்பொழுது வார்த்தையை வாசித்து, ஜனங்களிடம் அதைக் குறித்து பேசும்படியான நேரம் வந்துவிட்டது. பிதாவே, எங்கள் சிந்தனைகளில் எங்களை நடத்தி, மகிமையை நீர் எடுத்துக் கொள்வீராக. இன்றிரவு நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, எங்கள் இருதயங்களில் ஒரு நோக்கத்தைக் கொண்டவர்களாய், முன்னைக் காட்டிலும் மேலாக வாழவும், இன்னும் அதிகமாக உம்மிடம் நெருங்குவதற்கும் எங்கள் அனைவருக்கும் உதவியாயுள்ள ஏதாவதொன்றை நீர் எங்கள் மூலம் பேச வேண்டுகிறோம். கர்த்தாவே, அதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம், உம்மைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்ளவே நாங்கள் இங்கிருக்கிறோம். இன்றிரவு மகத்தானவராகிய உம்மை, உமது வார்த்தையின் வெளிப்படுத்துதலின் மூலம் எங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்து, நாங்கள் எவ்விதம் மேலான கிறிஸ்தவர்களாக இருக்க முடியும் என்பதையும் இக்கடைசி நாட்களில் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளவும் உதவியருளும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 19 இப்பொழுது என் பார்வை ஏசாயா: 38-ம் அதிகாரத்தில் உள்ள வேதபாகத்தின் மேல் விழுகிறது. நாம் ஏசாயா: 38-ம் அதிகாரத்தை வாசிப்போம்: அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர் புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் - பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது: நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன். ஏசா. 38:1-5 20 கர்த்தர் தாமே இந்த வேத வாசிப்புடன், தமது ஆசிர்வாதங்களைக் கூட்டுவாராக. இங்கு ஒரு சுருக்கமான செய்தி அளிக்கப்படுவதற்கு இது ஒரு தலைசிறந்த பொருள் என்று எண்ணுகிறேன். இதை நான்; தேவன் ஒரு மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருவதில்லை“ என்று அழைக்க விரும்புகிறேன். இன்றிரவு தெரிந்து கொள்ளப்பட்ட இந்த பொருளின் பின்னணியை அல்லது அடிப்படையை நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். தேவன் ஒரு மனிதனை மரணத்துக்கு கொண்டு வருவதற்கு முன்பு அவனை எச்சரித்தல். இப்பொழுது, எல்லோருமே இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். நாம் ஒருக்கால், “இந்த ஆள் எந்த எச்சரிக்கையுமின்றி மரித்துப் போனான்” என்று கூறக் கூடும். இல்லை, இல்லை, இல்லை, தேவன் ஒருபோதும்... அந்த மனிதனின் இருதயத்தில் என்ன இருந்தது என்பதை நீங்கள் அறியீர்கள். அவனுடைய வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? தேவன் ஒரு மனிதனை, அதைக் குறித்து எச்சரிக்காமல், அவனை அவனுடைய மரணத்துக்கு கொண்டு வருவதில்லை. அதை ஒரு ஆயத்தமாக அவனுக்கு முன்னறிவிக்கிறார். தேவன் இராஜாதிபத்தியம் உள்ளவர். அவர் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்தையும் தட்டி அவன் வருவதற்கான தருணத்தை அவனுக்கு அளிக்கிறார். அவன் ஒருக்கால் எச்சரிப்பை ஏற்றுக் கொள்ளாமல் அதை நிராகரித்து, தன் தலையை குலுக்கி அதிலிருந்து விலகிச் சென்று, “ஆ, இது ஏதோ ஒரு விசித்திரமான உணர்ச்சி, அதை மேற்கொள்வேன்” என்று கூறிவிடலாம். ஆனால், என்னவாயினும், அது தேவன், தேவன் அவனிடம் பேசுதல். 21 தேவன் ஜனங்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்காமல், இந்த உலகத்தின் மேலும் கூட நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவதில்லை. தேவன், தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை முதலில் அறிவிக்காமல், எதையும் செய்வதில்லை. தேவன் ஜனங்களுக்கு தெரிந்தெடுத்தலை (Choice) அளிக்கிறார். நீங்கள் சரியானதை செய்யலாம், அல்லது தவறானதைச் செய்யலாம், அது அவருடைய... பாருங்கள், தேவன் ஒரு போதும் தமது சுபாவத்தை மாற்றிக் கொள்ளமுடியாது. அவருடைய திட்டம், அவர் எதிலிருந்து தொடங்கினாரோ, அதிலிருந்து மாறமுடியாது. ஏனெனில் அவர் முடிவற்றவர், அவருடைய திட்டமும் கருத்துக்களும் எல்லாமே பரிபூரணமானவை. எனவே, அவர் அதை மாற்றுவாரானால், அவர் அதிகம் கற்றுக் கொண்டார் என்பதாக ஆகிவிடும். அவர் முடிவற்றவராயிருப்பதால், அவரால் அதிகம் கற்றுக் கொள்ள முடியாது. அவருடைய முத்தலாம் தீர்மானம் எப்பொழுதுமே பரிபூரணமாய் உள்ளது, அதை எதுவுமே மாற்ற முடியாது. பாருங்கள்? தேவன் மனிதனுக்கு... அவன் தவறு செய்யத் தருணம் கிடைப்பதற்கு முன்பாக, அதை ஏற்றுக் கொள்ள அல்லது புறக்கணிக்கக் கூடிய அடிப்படையில் அவனை வைத்தார் - அவன் ஏற்றுக் கொள்வானா, இல்லையா என்று. 22 இங்குள்ள போதகர், சகோ. பேக்கர் அன்று நடை பெற்ற போட்டிகளின் போது இருந்தார் என்று நினைக்கிறேன். சர்ப்பத்தின் வித்தின் பேரில் அவர் எழுதின கேள்விகள் என்னிடம் உள்ளன. அவை இங்குள்ளன. அவர் இங்கிருப்பாரானால், ஏன், நல்லது. அவரை இப்பொழுது நான் எவ்விடத்திலும் காணவில்லை. ஆனால் அவர் இங்கு தான் இருக்கிறார். அவரும் அவருடைய மனைவியும் மிக அருமையானவர்கள் ஆனால் சர்ப்பத்தின் வித்தைக் குறித்த போதகத்தில் சிலவற்றை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை... நான் கூறினவைகளின் பேரில் சில கேள்விகள், அதன்பிறகு அளிக்கப்பட்ட பிரசங்கங்களின் பேரிலும், குறிப்பாக கர்ப்பமாகுதலையும் மற்றவைகளையும் குறித்து, ஆனால் நான்... அந்த சகோதரன் மிகவும் அருமையானவர், இரண்டு நான்கு ஆண்டுகளாக அவர் கிறிஸ்தவராயிருக்கிறார். அவரால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை, பாருங்கள். 23 அது கடினம். நீங்கள் பரிசுத்த ஆவியின் பேரில் சார்ந்திருக்க வேண்டும், ஏனெனில் வேதாகமம் புதிராக எழுதப்பட்டுள்ளது. நீங்கள் செய்தித்தாளைப் படிப்பது போல், வேதாகமத்தை உட்கர்ந்து கொண்டு படிக்க முடியாது. அதிலுள்ள இரகசியங்கள் மறைந்துள்ளன. ஆம், ஐயா. தேவன் மலையின் மேல், மோசேயிடம், “யாதொரு சொரூபத்தையும் உண்டாக்க வேண்டாம்” என்று தாம் அளித்த கட்டளைகளில் கூறிவிட்டு, “மேலே வானத்தில் உள்ளவைகளுக்கு ஒப்பான எந்த சொரூபத்தையும் - தேவ தூதனின் சொரூபத்தையும் - உண்டாக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு, அதே நாளில், வெண்கலத்தால் இரண்டு தேவதூதர்களைச் செய்து கிருபை இருக்கின்ற கிருபாசனத்தின் மேல் வைக்கச் சொன்னதை நீங்கள் எவ்விதம் நியாயமாகக் கருதுவீர்கள்? பாருங்கள்? நீங்கள் தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்வதற்கு முன்பு, தேவனையும் அவருடைய இயல்பையும் புரிந்து கொள்ள வேண்டும். அவரே அந்த வார்த்தைக்கு திறவுகோலை உடையவராயிருக்கிறார். அவர் ஒருவர் மாத்திரமே அதை உபயோகித்து திறக்க முடியும். அவர் ஒருவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். 24 இங்கு நாம் என்ன காண்கிறோம் என்றால், நியாயத்தீர்ப்புக்கு முன்பாக மனிதனை எச்சரிப்பது, நியாயத்தீர்ப்புக்கு முன்பாக ஒரு தேசத்தை எச்சரிப்பது போன்றவை, அவருடைய இயல்பாயுள்ளது. அவர் எப்பொழுதுமே ஒரு எச்சரிக்கையை அளித்து, நமது பொறுப்பை ஞாபகப்படுத்துகிறார். நாம் பொறுப்புள்ளவர்கள். தேவன் ஒரு காரணத்துக்காக நம்மை இப்பூமியில் வைத்துள்ளார். அவர் எந்த காரணத்துக்காக நம்மை இங்கு வைத்திருக்கிறாரோ, அந்த காரணத்துக்கு நாம் அவருக்கு பொறுப்பாளிகளாய் இருக்கிறோம். நீங்கள் அவரிடத்தில் சென்று, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யாவிடில்... நீங்கள் ஒரு மனிதனின் கீழ் வேலை செய்யச் சென்று அவர் ஒரு பண்ணையில் உங்களுக்கு வேலை தருகிறார், அல்லது வேறெங்காவது தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் களஞ்சியத்துக்கு சென்று “நல்லது” என்று சொல்லி அங்கே ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்? பாருங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்று நீங்கள் அவரைப் போய் கேட்க வேண்டும், அதன் பிறகு அதைச்செய்ய வேண்டும். நீங்கள் ஒரு எஜமானனுக்கு வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களுடைய வேலை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுபோன்று, நாம் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை இங்கு வைத்துள்ள அவரிடம் நாம் சென்று, “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்? நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஏன் இங்கிருக்கிறேன்?” என்று கேட்க வேண்டும். அது இல்லத்தரசியோ, பாத்திரம் கழுவுபவரோ, யாராயிருப்பினும்... நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, உங்களுக்குத் தெரிந்த வரைக்கும் அதை சிறப்பாக செய்யுங்கள், அது எவ்வளவு தாழ்ந்த வேலையாயிருந்தாலும் பரவாயில்லை, அதை நீங்கள் செய்தாக வேண்டும். நீங்கள், “நல்லது...” எனலாம். தொல்லை என்னவெனில், நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனின் வேலையைச் செய்ய விரும்புகிறோம். நாம் கூறுவது போன்று, நாம் எல்லோருமே ஒரே நேரத்தில் கால் பந்தை உதைக்கப் பார்க்கிறோம், பாருங்கள். 25 இங்குள்ள இந்தக் கை கடிகாரம், அதிலுள்ள ஒவ்வொரு அசைவும் அதனதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு பாகமும் கடிகாரத்தின் முள்களாக (hands) இருக்கமுடியாது. நேரம் என்னவென்று அறிந்து கொள்ள, நான் கடிகாரத்தின் முள்களைத்தான் பார்க்கிறேன். ஆனால் கடிகாரத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிறு சக்கரங்களுக்கு பழுது நேர்ந்தால், கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டாது. அதே விதமாகத்தான் ஜனங்களைக் குறித்தும் உள்ளது. நாம் எல்லோருமே கிறிஸ்துவின் சரீரத்தில் அவரவர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு இசைவாக இயங்க வேண்டும். பாருங்கள்? அப்பொழுது நாம் சுற்றிலும் பார்த்து, நாளின் எந்த நேரத்தில் இருக்கிறோம் என்பதைக் காணலாம். பாருங்கள்? அப்பொழுது உலகம், அது என்னவென்று காண, நோக்கிக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அவர்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் கடிகாரத்தின் சிறிய கம்பிச் சுருளோ (hair spring), அல்லது முக்கிய கம்பிச் சுருளோ (main spring) எதுவாக இருந்தாலும், அந்த வேலையை உங்களால் முடிந்த வரைக்கும் சிறப்பாகச் செய்யுங்கள். 26 ஏனெனில் என்றாவது ஒரு நாள் நாம் தேவனுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை உடையவர்களாயிருக்கிறோம். இப்பூமியில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும் தனக்களிக்கப்பட்ட பொறுப்புக்காக தேவனுக்கு பதில் சொல்ல வேண்டியவனாயிருக்கிறான். நம்மில் அநேகர், உக்கிராண வேலைக்காக பதில் சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம்... இந்த பொறுப்பு நமக்கு தேவனால் அளிக்கப்பட்டுள்ள உக்கிராண ஊழியமாகும். அது என்னவாயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. சில நிமிடங்களுக்கு முன்பு நான் கூறினது போல், நீங்கள் இல்லத்தரசியாயிருந்தால், உத்தமமுள்ள இல்லத்தரசியாயிருங்கள். அது உண்மை. நீங்கள் பண்ணையாளராயிருந்தால், உத்தமமுள்ள பண்ணையாளராக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டுமென்று தேவன் உங்களுக்கு என்ன விதமான வேலையைக் கொடுத்திருக்கிறாரோ, அது உங்களுடைய உக்கிராண ஊழியம், அதற்காக நீங்கள் தேவனுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஏனெனில் அதை செய்வதற்கு இவையெல்லாம் தேவையாயுள்ளது. 27 எசேக்கியா தன் சிருஷ்டிகரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கும்படி அவனிடம் கூறப்பட்டது. எசேக்கியா ஒரு ராஜா, பெரியவன். அவனுடைய விண்ணப்பத்தை இங்கு கவனித்தீர்களா? “கர்த்தாவே, என் மேல் இரங்கும்படி உம்மை கெஞ்சிக் கேட்கிறேன். உமக்கு முன்பாக நான் மன உத்தமமாய் நடந்து வந்தேன். அது நமக்கு எத்தகைய சாட்சியாய் உள்ளது! அது அப்படித்தான் இருக்க வேண்டும் - தேவனுக்கு முன்பாக நடக்கும் ஒரு மனிதன். மரணமும் கூட அந்த மனிதனின் மேல் உரைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் தேவன் அவனைக் குறித்து தன் சிந்தையை மாற்றிக் கொண்டார். ஏனெனில் எசேக்கியா ஏதோ ஒன்றைச் செய்ய விரும்பினான். தேவன் “நம்முடைய இருதத்தின் வேண்டுதல்களை நமக்கு அருள்செய்வார்” என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (சங். 37:4). எசேக்கியா போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவனைப் புற்று நோய் பீடித்திருந்தது - அப்படி ஏதோ ஒன்று. அக்காலத்தில் அவர்கள் அதை “பிளவை” (boil) என்றழைத்தனர். பிளவைகள் நம்மை கொல்வது வழக்கமில்லை, அவை குணமாகிவிடும் என்று நாமறிவோம். அது ஒருவேளை புற்றுநோயாய் இருந்திருக்கக் கூடும். அது பிளவையைப் போல் பிளந்தது. தேவன் ஏசாயாவிடம் “நீ எசேக்கியாவிடம் போய், அவன் மரிக்கப் போகிறான் என்று சொல்” என்றார். எசேக்கியா ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தான்... 28 நீங்கள் தேவனிடத்தில் ஏதாவதொன்றை விண்ணப்பம் செய்வீர்களானால், அதற்கான காரணம் உங்களுக்கு இருக்க வேண்டும். நான் அடிக்கடி எடுத்துரைக்கும் இந்த வேத வாக்கியத்தைப் போல்: “நீங்கள் இந்த மலையைப் பார்த்து தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” (மாற். 11:23). அது முற்றிலுமாக நோக்கத்தையும் குறிக்கோளையும் சார்ந்தது, பாருங்கள், இல்லையென்றால் அது நடக்காது. பாருங்கள்? நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, அங்குதான் நம்மில் அநேகர் தவறு செய்கிறோம். நாம் புறப்பட்டுச் சென்று, “இதைச் செய்ய எனக்கு விசுவாசம் உண்டென்று உங்களுக்கு காண்பிக்கிறேன்” என்கிறோம். அப்படியானால் நீங்கள் துவக்கத்திலேயே தவறு செய்கிறீர்கள், நீங்கள் விளையாடுவதற்காக தேவன் உங்களுக்கு வரங்களைக் கொடுக்கவில்லை. சற்று முன்பு நான் கூறியது போல, நீங்கள் விளையாடுவதற்காக தேவன் உங்களுக்கு தரிசனங்களை அளிப்பதில்லை. அது விளையாடுவதற்கான ஒன்றல்ல. அது புனிதமானது. அதை நீங்கள்... தேவன் உங்களை அனுமதிக்கும் விதத்தில் உபயோகிக்க வேண்டும். அவருக்கு நீங்கள் கட்டப்பட்டவர்களாயிருங்கள், அந்த ஆள் தவறு செய்கிறார், இதை, அதை, மற்றதை செய்கிறார் என்று நீங்கள் எவ்வளவாக அவரிடம் கூற விரும்பினாலும், தேவன் உங்களிடம் கூறச் சொல்லும் வரைக்கும் நீங்கள் பேசாமலிருங்கள். தேவன் கூறும் போது, நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் வரலாம். அது வரைக்கும், அதைக் குறித்து மறந்துவிடுங்கள். 29 இன்றைய உலகம் அன்று எசேக்கியா இருந்த நிலையில் உள்ளது, அது எச்சரிக்கப்பட்டு வருகிறது. அது அடிக்கடி எச்சரிக்கப்பட்டு வருகிறது. சபையும் எச்சரிக்கப்பட்டு வருகிறது. இவைகள் எதேச்சையாக நடப்பதில்லை. அவை அனைத்துக்கும் பின்னால் ஏதோ ஒன்றுண்டு. எசேக்கியாவுக்கு பிளவை உண்டாகி வியாதிப்பட்டிருந்தது எதேச்சையாக நடக்கவில்லை. தேவன் ஏசாயாவை எசேக்கியாவிடம் அனுப்பி, அவன் பிழைக்கமாட்டான், மரித்துப் போவான் என்றும், ஆகையால் அவன் தன் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கூறச் சொன்னார். அப்பொழுது எசேக்கியா அழுது, “நான் உமக்கு முன்பாக மன உத்தமமாய் நடந்து வந்தேன். ஒரு நோக்கத்திற்காக, ஒரு நல்ல நோக்கத்திற்காக, என் உயிரைக் காக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்” என்று தேவனிடம் முறையிட்டான். அப்பொழுது தேவன் தீர்க்கதரிசியிடம், “அவனிடம் போய் சொல்” என்றார். 30 அது விசித்திரமான ஒன்றல்லவா? எசேக்கியா தேசத்திலேயே மிகவும் பெரியவனாயிருந்தான். பாருங்கள்? அவன் ஒரு ராஜா, தேவ பக்தியுள்ள மனிதன். அவன் உண்மையில் ஆண்மைத்தனம் கொண்டவன். அவன் தேவனிடம், “நான் உமக்கு முன்பாக மன உத்தமமாய் நடந்து வந்தேன்” என்று முறையிட்டதற்காக தேவன் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. அது முழுவதையும் கூறுவதாகும். பாருங்கள்? தேவன், “இல்லை, எசேக்கியா, நீ அவ்விதம் நடக்கவில்லை” என்று கூறவேயில்லை. அவன் அவ்வாறு நடந்தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அவர், “உன் வாழ் நாளை இன்னும் சிறிது காலம் நீட்டப் போகிறேன்” என்றார். பாருங்கள்? ஏனெனில் அவன் நீதிமானாய் இருந்தான். அவன் உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரனாய் இருந்தான். 31 அப்படியானால், நமது நோக்கமும் குறிக்கோளும் சரியாயிருக்குமானால், நமக்கும் ஒன்றைக் கேட்க உரிமையுண்டு என்று நமக்குத் தோன்றுகிறது. இன்று நாம் காண்பது என்னவெனில், கடந்த பல ஆண்டுகளாக, கடந்த பதினைந்து அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள் என்று நான் கூறமுடியும், தேசம் முழுவதும் ஓயாமல், “மனந்திரும்பு, இல்லையேல் அழிந்து போ” என்னும் எச்சரிக்கை சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா, இன்று காலையில் என் மனைவியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். நான்... காலை உணவு அருந்தும் போது மேசையின் அருகில் அமர்ந்து, நான் வீட்டைவிட்டுப் புறப்படும் முன்பு பேசிக் கொண்டிருந்தோம். நான் “மனைவியே...” என்றேன். அவள் பில்லி கிரகாமைக் குறித்தும் அவருடைய மனைவியைக் குறித்தும், அவர்கள் எவ்விதம் பொதுவாக வாழ முயல்கின்றனர் என்றும் பேசிக் கொண்டிருந்தாள். நான், “அப்படிப்பட்டவரே உண்மையான தேவனுடைய ஊழியக்காரன், அவர் ஒருபோதும்... அவருக்கு ஒரு வேளை தன் கூட்டங்களில் ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று மில்லியன் டாலர்கள் கிடைக்கக் கூடும். ஆனால் அவர் அதை எடுத்துக் கொள்வதில்லை, அவருடைய தர்ம நிறுவனம் (Foundation) அதை எடுத்துக் கொண்டு, தேவனுடைய ஊழியத்துக்காகவும் ஒலிப் பரப்புக்காகவும் மற்றவைகளுக்காகவும் செலவிடுகிறது. பில்லி ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய இருபத்தையாயிரம் டாலர்கள் ஊதியமாக பெறுகிறார்” என்றேன். அவள், “அவரால் எப்படி ஆண்டுக்கு இருபத்தையாயிரம் டாலர்கள் செலவழிக்க முடிகிறது?” என்று கேட்டாள். நான்,“அவருக்குத் தேவையானதை அவர் எடுத்துக் கொள்கிறார், அவ்வளவுதான். வீட்டுக்காக அவர் கிரயம் செலுத்த வேண்டும், இன்னும் மற்ற காரியங்கள்” என்று கூறிவிட்டு, “எனக்கு பில்லி கிரகாமின் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு, ஏனெனில் அவரிடம் ஒரு செய்தி உண்டு, அது மனந்திரும்புதலின் செய்தி” என்றேன். எனக்குத் தெரிந்த வரையில், தேவன் பில்லி கிரகாமை அந்த செய்தியுடன் உபயோகித்தது போல, வேறெவரையும் இன்று இத்தேசத்தில் உபயோகித்ததில்லை என்று என்னால் கூறமுடியும். ஓ, அவர் ஆணித்தரமாக பேசுகிறார். அவர் அங்கு நின்று கொண்டு, அரசியல்வாதிகளையும் சபை உறுப்பினர்களையும் மனந்திரும்பும்படி அழைக்கிறார். அது வரைக்குமே அவர் செல்கிறார். 32 இதோ ஓரல்ராபர்ட்ஸ் வருகிறார். அவர் மற்றொரு கர்த்தருடைய மகத்தான ஊழியக்காரன். யாரையுமே ஓரல் ராபர்ட்ஸுடன் ஒப்பிட முடியாது. அவருடைய வேட்டை நாய் பிடி, அவர் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு பொல்லாத ஆவிகளைத் துரத்துகிறதும், சிறு சிறு உணர்ச்சிகளும், தெய்வீக சுகமளித்தலும். அது முற்றிலும் உண்மை. அவர் பெந்தெகொஸ்தேயினருக்கு செய்தியாளன். சபை ஸ்தாபன உலகத்துக்கும், பாருங்கள், குளிர்ந்து போயுள்ள உலகத்துக்கும் ஒவ்வொரு செய்தியாளன் இருக்கிறார். அதன்பிறகு நம்முடைய சிறிய எளிய ஊழியத்தைப் பாருங்கள். அது, “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்” என்பதாய் நிற்கிறது, பாருங்கள். அது என்ன செய்து கொண்டிருக்கிறது? மணவாட்டியின் குழுவை அழைத்துக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? இந்த இரு குழுக்களிலுமிருந்தும் அது அழைக்கிறது. அது சக்கரத்திலிருந்து ஒரு சக்கரத்தை வெளியே எடுக்கிறது. நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? 33 பிறகு தேவன் பில்லி கிரகாம் பிரசங்கிக்கும் அந்த செய்தியை உறுதிப்படுத்துகிறார். ஓரல்ராபர்ட்ஸ் ஏறெடுக்கும் ஜெபங்களின் மூலம் தேவன் பிணியாளிகளை குணமாக்குகிறார். இயேசு செய்த அதே காரியங்களையே தேவன் இக்காலத்தில் செய்து... இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறார். அது அவைகளை அழைத்துக் கொண்டிருக்கிறது. இவை இந்நேரத்தின் செய்திகளாகும். இச்செய்திகள் ஒவ்வொன்றும், “மனந்திரும்பு, இல்லையேல், அழிந்து போ” என்று அழைத்துக் கொண்டிருக்கின்றன அது உண்மை. “மனந்திரும்பு, இல்லையேல் அழிந்து போ”. நம்பிக்கை எதுவுமில்லை, அது போய்விட்டது. அவருடைய வருகையைக் குறித்து உலகம் எச்சரிக்கப்படுகின்றது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் கர்த்தராகிய இயேசு வருகிறார் என்று சபை ஸ்தாபனங்களையும்... எச்சரிக்கின்றன. 34 தேவன் எப்பொழுதும் மூன்றுகளில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவை. அவர் மூன்றுகளில் இருக்கிறார். இப்பொழுது, தேவன் பெயர் கிறிஸ்தவ சபைக்கு அளிக்கப்படும் அந்த மனந்திரும்புதலின் செய்தியில் இருக்கிறார், பெந்தெகொஸ்தே சபைக்கு அளிக்கப்படும் அந்த தெய்வீக சுகமளித்தல் என்னும் செய்தியில் தேவன் இருக்கிறார், மணவாட்டிக்கு அளிக்கப்படும் செய்தியில் இருக்கிறார். பாருங்கள்? இவை அனைத்துமே, ஒன்று இதற்கும், இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து அதற்கும் அழைக்கின்றன என்று நாம் அறிந்து கொள்கிறோம். உலகத்திலிருந்து தேவன் சபையை அழைக்கிறார். பெயர் கிறிஸ்தவ சபையிலிருந்து பெந்தெகொஸ்தேக்குள் அழைக்கிறார், பெந்தெகொஸ்தேயிலிருந்து மணவாட்டியை அழைக்கிறார். பாருங்கள்? லூத்தர், வெஸ்லி, தற்காலம் போல், எல்லாமே பரிபூரணமாக இணைகின்றன. அதைக் குறித்து எந்த பிழையும் இல்லை. அதன் முனைகளையும், பக்கங்களையும், உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் நான் அலசிப் பார்த்து, வேத வாக்கியங்களின் மூலமாகவும், காலக்கிரம அட்டவணைகளின் மூலமாகவும் அது முற்றிலும் உண்மை என்பதைக் காண்பித்தேன். பாருங்கள்? அதில் எந்த பிழையும் இல்லை. இந்த ஞாயிறன்று தேவன் அதை ஆழமாக உங்களில் பதித்து, நீங்கள் ஒருக்காலும் அதை மறக்காமலிருக்கச் செய்வார் என்று நம்புகிறேன். பாருங்கள்? 35 இப்பொழுது தேவன், நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தப்படுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார். அணுகுண்டுகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன, எல்லாமே ஆயத்தமாயுள்ளது. தேவன், இது நிகழ்வதை அனுமதிக்கும் முன்பு, அவர் சோதோமில் செய்தது போல, “அதை விட்டு வெளியே வா! ஆயத்தப்படும்! ஏதோ ஒன்று நிகழப் போகின்றது என்று அழைப்புவிடுக்கிறார். நோவாவின் காலத்தில் நடந்தது போல, ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த பாவம் நிறைந்த அந்த மகத்தான உலகத்தை அழிப்பதற்காக தேவன். ஜலப்பிரளயத்தை அனுப்புவதற்கு முன்பு; அந்நாளைப் போல இந்நாள் உள்ளது என்று இயேசு தெளிவாகக் கூறியுள்ளார்; “நோவாவின் காலத்தில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்”, ஸ்திரீகள் எவ்விதம் தாறுமாறாக நடந்து கொண்டனர், அவர்கள் பெண் கொண்டனர், பெண் கொடுத்தனர். அது மட்டுமல்ல, பெரிய விஞ்ஞான சாதனைகள், கல்வியறிவு பெற்ற மேதைகள் புத்தி கூர்மையுள்ளவர்களின் பக்கம் சேர்ந்து கொண்டு, அந்த சிறிய எளிய மந்தை ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, வரப்போகும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க காத்துக் கொண்டிருத்தல், தேவன் அந்த அவர், என்ன உரைக்கக் கட்டளையிட்டாரோ, அந்த கட்டளையை அப்படியே நிறைவேற்றினது. அது எப்பொழுதும் “வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்” என்பதாய் இருந்தது. பாருங்கள்? அது எப்பொழுதுமே அவர்களை வார்த்தைக்குத் திரும்ப கொண்டு வந்தது. நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பு, ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் எசேக்கியாவுக்குச் செய்தது போல, அவர், “ஆயத்தப்படும், ஏனெனில் நியாயத்தீர்ப்பு விழுவதற்கு ஆயத்தமாயுள்ளது” என்றார். நோவா, அந்த நேரத்துக்காக ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். அது நியாயத்தீர்ப்புக்கு முன்பாக விடுக்கப்படும் கிருபையின் அழைப்பாகும். 36 நியாயத்தீர்ப்பின் நேரம் வருவதற்கு முன்பு நினிவே பட்டினத்தார் அறிவிக்கப்பட்டனர். தேவன் நினிவேயை நோக்கிப் பார்த்து, “இவைகள் எனக்கு சலிப்புண்டாக்குகின்றன” என்றார். நான் புரிந்து கொள்வது என்னவெனில்... அந்த பெரிய, அஞ்ஞான, புறஜாதி உலகம்... அவர்களுடைய பட்டினம், அக்காலத்தில் அவை பட்டினம் என்றழைக்கப்பட்டன; இப்பொழுது தேசங்கள், ஜனத்தொகை பெருகின பிறகு, அவை தேசங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவர், “இந்த மகத்தான பட்டினம் முழுவதும் பாவத்தால் நிறைந்திருக்கிறது” என்றார். தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பு, “அதை விட்டு வெளியே வா! சரிப்படு!” என்னும் எச்சரிப்பின் செய்தியை அனுப்பினார். கவனியுங்கள். தீர்க்கதரிசி, “இன்னும் நாற்பது நாட்களில் இந்த பட்டினம் கவிழ்க்கப்பட்டு போகும்” என்பதைத் தவிர வேறொன்றையும் கூறவில்லை. 37 ஓ, இதை ஜனங்களுக்கு எடுத்துக் கூறுவது போன்ற செயல் சில சமயங்களில் எவ்வளவு கடினமாயுள்ளது! தீர்க்கதரிசி கவனமாயிராவிடில், அவன் தொல்லையில் அகப்பட்டுக் கொள்வான். ஏனெனில் அவன் ஒரு பக்கம் போய், அதை எளிதாக்க முயன்று. இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் ஒப்புரவாகிவிடுவான். ஆனால் தேவனிடத்திலிருந்து கட்டளை பெற்ற உண்மையான தீர்க்கதரிசியோ, எதன் பேரிலும் ஒப்புரவாகாமல், இதை முற்றிலுமாக நேர்கோட்டில் வைக்க வேண்டும். அவர் எலியாவின் ஆவியை அதிகமாக உபயோகித்த காரணம் என்னவெனில், பாருங்கள். அந்த ஆவி அவருடைய கட்டளையை அப்படியே செய்து நிறைவேற்றினது. பாருங்கள், அவருடைய கட்டளைகள் எண்ணமாயிருந்ததோ, அதை கச்சிதமாக அப்படியே கொண்டு வந்தது. எப்பொழுதுமே வார்த்தையண்டைக்கு திரும்பி வாருங்கள். பாருங்கள்? எப்பொழுதுமே வார்த்தையண்டைக்கு அவர்களை கொண்டு வாருங்கள். 38 இப்பொழுது, நினிவே பாவத்தால் நிறைந்திருந்தது என்று காண்கிறோம். அது புறஜாதி உலகமானதால், தீர்க்கதரிசி தயங்கினான். பாருங்கள், அது புறஜாதி தேசம், புறஜாதி மக்கள், அவனுடையவர்கள் அல்ல, எபிரேயர்கள் அல்ல. அவர்கள் புறஜாதிகள். நினிவே ஒரு சிறந்த வணிக கப்பல் துறைமுகமாய் இருந்தது. மீன் பிடிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. ஜனங்கள் மீன் பிடித்தனர். அவர்கள் அது பாவம் பெருகின நாடாக இருந்திருக்க வேண்டும். நிறைய பணம்; பணம் எங்கு ஏராளமாயுள்ளதோ, அங்கு பாவமும், வன்முறை சம்பவங்களும் பெருகியிருக்கும் என்பது இக்காலத்து பொதுவான அபிப்பிராயமாகும். தேவன் அதைக் குறித்து சலிப்படைந்தார். எனவே அவர் அந்த தேசத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் தீர்க்கதரிசியிடம், “நீ நினிவேக்குச் சென்று, அதற்கு விரோதமாய் கூக்குரலிட்டு, 'இன்னும் நாற்பது நாட்களில் இந்த பட்டினம் அழிவுக்குள்ளாகும்' என்று சொல்” என்றார். யோனா, “நான் தொல்லையில் மாட்டிக் கொள்வேன்” என்று நினைத்தான். அவன் அதிக நிச்சயமுள்ளவனாயிருக்க விரும்பினான். எனவே, ஒரு சிறு விடுமுறைக்கு செல்லலாமே என்று கருதி தர்ஷீசுக்குப் போனான். நாம் என்ன அறிந்து கொண்டோம் என்றால். நாற்பது நாட்கள் மாத்திரமே இருந்தன். பாருங்கள்? எனவே, செய்தி மிகவும் அவசரமானது, காலம் சமீபமாயிற்று. நீங்கள் மற்றவைகளுடன் விளையாடிக் கொண்டிருந்து, பட்டம் பெற்று, ஏதோ ஒன்றைக் கண்டு பிடிக்க நினைக்காதீர்கள். நேரம் சமீபமாகிவிட்டது! இன்றைய ஜனங்களிடம் காணப்படும் விஷயம் என்னவெனில், அவர்கள் பெரிய பள்ளிக்கூடங்களைக் கட்டி, பெரிய காரியங்களைக் கொண்டிருக்க முனைகின்றனர். கிருபையானது... என்னே! நாம் கர்த்தருடைய வருகையைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், நமக்கு பள்ளிக்கூடங்கள் எதற்கு? நமக்கு தேவனிடம் மனந்திரும்புதல் அவசியமாயுள்ளது. பாருங்கள்? 39 ஹட்சன் டெய்லர் அந்த இளம் மிஷனரியிடம் கூறினது போல்... ஒரு சீனாக்கார இளைஞன் அவரிடம் வந்து, “திரு. டெய்லர், கர்த்தராகிய இயேசு என்னை அவருடைய ஆவியினால் நிரப்பியிருக்கிறார்; நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் பத்து ஆண்டுகள் படித்து என் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளட்டுமா?” என்று கேட்டானாம். அதற்கு அவர், “மகனே, பட்டங்களுக்காக காத்திருக்காதே. மெழுகுவர்த்தி பற்றவைக்கப்பட்டிருந்தால், அதை போய் சொல்! அதை போய் சொல்! பட்டத்துக்காக காத்திருக்காதே. நீ பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு, பாதி எரிந்து போயிருப்பாய்” என்றாராம். அது பற்ற வைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு வேறொன்றும் தெரியவில்லை என்றால், அது எப்படி பற்ற வைக்கப்பட்டது என்பதை எடுத்துக் கூறுங்கள். வேறொருவரின் ஸ்தானத்தை அல்லது வேறொரு இடத்தை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். அதை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் சத்தியம் என்று அறிந்துள்ளதை எடுத்துக் கூறுங்கள். “இவ்வகையில் தான் அது என் மேல் வந்தது, அப்பொழுது இப்படி தான் நான் உணர்ந்தேன்” என்று கூறுங்கள். அது... அதைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமாக தெரியாமல் போனால், தெரிந்ததைக் கூறுங்கள்! நாம் புறப்பட்டுச் செல்வோம்! செய்தி அவசரமானது, காலம் சமீபமாயிற்று. 40 ஏசாயா, “அந்த பிளவையை வைத்துக் கொண்டு, அவன் எப்படி சமாளிக்கிறான் என்று நான் முதலில் பார்க்கட்டும். அவன் எப்படி...” என்று கூறியிருந்தால்? பாருங்கள், தேவன் அவனிடம், “இப்பொழுது அங்கு போய் அதை சொல்” என்றார். பாருங்கள்? அவர் யோனாவிடமும் போகச் சொன்னார். ஓ, என்னே! யோனா ஆழ்கடலில் சென்ற போது, அவனுடைய கப்பல் புயலில் சிக்கிக் கொண்டது. அவர்கள் பாய்மரத்தை உயர்த்தினார்கள், கப்பல் சுழலத் தொடங்கினது. இது என்ன விஷயம் என்று அவர்கள் வியந்தனர். கப்பலுக்குள் தண்ணீர் நிறைந்தது போல் தோன்றினது. ஒவ்வொரு மனிதனும் தன் தேவனை நோக்கிக் கூப்பிட்டான். முதலாவதாக என்ன தெரியுமா... யோனா விடுமுறை கழிக்க போய்க் கொண்டிருந்தான். எனவே அவன் உறங்கலாமே என்று நினைத்தான். அவன் கப்பலின் அடித்தளத்துக்கு சென்று, கால்களை உயர்த்தி வைத்துக் கொண்டு உறங்கியிருப்பான். அப்பொழுது ஒருவன் அவனிடம் வந்து, “ஓ சோம்பேறியே, எழுந்திருந்து உன் தேவனை நோக்கிக் கூப்பிடு” என்றான். எது தவறாய் போனது என்று யோனா அறிந்து கொண்டான். அவ்வாறே, இன்றைக்கு எது தவறாயுள்ளது என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்கிறான். பாருங்கள்? 41 அவன், “இது என் தவறால் உண்டானது தான். என் கைகளைக் கட்டி, என்னை தூக்கி சமுத்திரத்தில் போட்டுவிடுங்கள். அப்பொழுது இந்த கஷ்டம் நீங்கிவிடும்” என்றான். அவர்கள் நற்பண்பு கொண்டவர்களாயிருந்தபடியால், அவ்விதம் செய்ய அவர்களுக்கு மனதில்லை. ஆனால் அவன் தீர்க்கதரிசியென்றும், அவன் என்ன கூறுகிறான் என்பதை அறிந்திருக்கிறான் என்றும் அவர்கள் கண்டுகொண்டனர். அவன், “நான் முதலில் விடுமுறையைக் கழிக்கலாமே என்று எண்ணினேன். ஆனால் தேவனோ நான் விடுமுறை கழிப்பதை விரும்பவில்லை. அங்கு நான் சென்றாக வேண்டும். நான் செய்ய வேண்டிய ஒரு பணி உண்டு. நான் போவதற்கு முன்பு சிறிது ஓய்வெடுக்கலாமே என்று நினைத்தேன். இப்பொழுது நான் போயாக வேண்டும். செய்தி அவசரமானது. அங்கு நான் அடைந்தாக வேண்டும்” என்றான். நான் நினைக்கிறேன், ஆயத்தப்படுத்தப்பட்ட அந்த குறிப்பிட்ட மீன், யோனாவை விழுங்கி அவனை வயிற்றில் கொண்டவுடனே, அது எதிர் திசையில் திரும்பி, தண்ணீரை நாலா பக்கங்களிலும் வாரியடித்து, வேகமாக நினிவேயை நோக்கி நீந்திச் சென்றிருக்க வேண்டும். ஆயத்தப்படுத்தப்பட்ட அந்த மீனுக்குள் தேவன் அந்த செய்தியை கொண்டு சென்றார். அது வேகமாக நினிவேயை நோக்கிச் சென்றது. ஏனெனில் அதற்குள் செய்தியாளன் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் தவறான கப்பலில் ஏறினான், ஆனால் தேவனோ அவனுக்காக ஒரு கப்பலை ஆயத்தம் செய்து கொடுத்தார். எனவே, நாம் மாத்திரம் தேவனுக்கு செவி கொடுத்தால் தேவன் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார். பாருங்கள்? வழி இல்லாத இடத்தில் அவர் வழியை உண்டு பண்ணுவார். அவரே வழி. பாருங்கள்? இன்றுள்ளது போல் செய்தி முற்றிலும் அவசரமாயிருந்தால், தேவன் ஒரு வழியை உண்டு பண்ணுகிறார். 42 நாம் மறுபடியும் என்ன காண்கிறோம் என்றால், ஆமோஸ்... நான் இந்த ஆமோஸின் பேரில் பிரசங்கித்திருக்கிறேன். நீங்கள் எப்பொழுதாவது ஆமோஸின் வரலாற்றைப் படிக்க விரும்பினால், அது நல்ல ஒரு வரலாறு. நீங்கள் ஆமோஸின் வரலாற்றைப் படியுங்கள், ஆமோஸ் முதலாம் அதிகாரம். நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு இதோ வேறொரு உதாரணம், அவன் எச்சரிக்கை விடுக்கவிருந்த அந்த பட்டினத்தில் யூதர் கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஒருவிதம் வழிவிலகியிருந்தனர். அது ஒரு பெரிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கியது. இன்று காலையில் அவனைக் குறித்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். அவனுடைய வழுக்கை மண்டை மலையின் உச்சியை அடைந்து, அவனுடைய சிறு வயோதிப கண்கள், அந்த மகத்தான தேசத்தின் பாவத்தை கண்டபோது குறுகியிருக்கும் என்று நினைக்கிறேன். அவனுடைய வெள்ளை தாடியை அவன் தன் விரல்களினால் இப்படி வருடியிருப்பான். என்னே ஒரு காரியம்! அவன் எங்கிருந்து வந்தானென்று யாருக்குமே தெரியாது. அந்த தீர்க்கதரிசிகளை யாருமே அறியார்கள். அவர்கள் எங்கிருந்தோ எழும்பி, அதேவிதமாக சென்றுவிடுகின்றனர். 43 ஆமோஸ் நகரத்துக்குள் சென்று, “கர்த்தர் உரைக்கிறதாவது! மனந்திரும்புங்கள், இல்லையேல் அழிந்து போங்கள், தேவன் இந்த நகரத்தை அழித்துப் போடுவார். நீங்கள் உங்கள் சத்துருவுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டீர்கள். உங்கள் சத்துருவுடன் நீங்கள் சமாதானமாயிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அசீரியர்கள் தங்கள் சேனைகளை கூட்டிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் இருவரும் ஒருமித்திருந்தாலொழிய நடந்து செல்ல முடியாது. அவ்வளவுதான்” என்றான். நாம் பிரிந்து வர வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் உலகத்திலிருந்து பிரிந்து வர வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஒரே நேரத்தில் நாம் உலகத்துடனும் தேவனுடனும் வாழத் தலைப்படக் கூடாது; இப்பிரஞ்சத்துக்கு ஒத்த வேஷத்தை தரித்துக் கொண்டு தேவனுடன் வாழ முடியாது. நீங்கள் இவ்விரண்டில் ஏதாவது ஒன்றுடன் வாழ வேண்டும், நீங்கள் இவ்விரண்டில் ஏதாவதொன்றை விசுவாசிக்க வேண்டும். 44 இந்த ஜனங்கள் மனந்திரும்பாவிட்டால், நியாயத்தீர்ப்பு ஜனங்களின் மேல் வருவது நிச்சயமென்று ஆமோஸ் முன்னுரைத்தான் என்று நாம் காண்கிறோம். (என்னே, அது எவ்வளவு நன்றாக நமது நாளுடன் பொருந்துகிறது). இந்த மகத்தான நகரத்தை நாம் மறுபடியும் பின்னிட்டு நோக்கிப் பார்க்கும்போது, அதன் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருந்தது, அவர்களுக்கு எல்லாமே இருந்தது, அது செழித்திருந்தது. அவர்கள் செழிப்புற்றிருந்ததனால், அவர்கள் தேவனுடைய சித்தத்தில் இருந்ததாக எண்ணியிருந்தனர். செழிப்புக்கு தேவன் எப்பொழுதுமே காரணம் அல்ல என்று அவர்கள் கண்டு கொண்டனர். இல்லை, தேவன். சில நேரங்களில் சபைகளில் செழுப்புண்டாகும் போது, அது அவர்களை தேவனிடமிருந்து அகற்றிவிடுகிறது. 45 உங்களுக்குத் தெரியுமா, ஒரு சமயம் தேவன் இஸ்ரவேலரை நோக்கி, “நீ வயலில் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி உள்ளே கொண்டு வந்தேன்”, அவருடைய சொந்த பிள்ளையாயிருக்க. “ஆனால் நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியான போது, நீ வழிப்போக்கருடன் வேசித்தனம் பண்ணினாய்” என்றார். (எசே. 16: 6,9,15). பாருங்கள்? “நீ ஏழையும் தரித்திரமுமாயிருந்தபோது, என்னை சேவித்தாய். நான் உன்னை ஆசிர்வதித்து உனக்கு ஏராளமாக கொடுத்தபோது, நீ சோரம் போனாய்”, அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒ, என்னே! நாம் என்ன காண்கிறோம் என்றால், இந்த தீர்க்கதரிசி ஆமோஸ் அந்த தேசத்துக்கு விரோதமாய் கூக்குரலிட்டான். அவன் ஒரு ஏர் உழவன் அவன் அவர்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் தேவனுடன் சரியாக ஆகாவிட்டால், அவர்கள் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டுள்ள அவர்களுடைய சத்துருவே அவர்களை அழித்துப் போடுவான் என்றான். 46 பெருமையுள்ள நமது அமெரிக்காவும் தேவ கோபாக்கினைக்குத் தப்பித்துக் கொள்ளப் போவதில்லை. இங்கு நான் ஒரு நாள் பேசினது போல, இங்குதான் நான் அதைக் குறித்து பேசினேன் என்பது உறுதி எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. இனி முன்னேறக் கூடியது எதுவுமேயில்லை. அரசியலில் முன்னேற்றம் இருக்காது, அது போய்விட்டது. சமுதாய வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றத்தைக் காண முடியாது, ஏனெனில் அது மிகவும் ஒழுக்கக்குலைச்சலாகிவிட்டது. அதை நீங்கள் முன்னேறச் செய்ய முடியாது. நீங்கள் எதிலும் நம்பிக்கை வைக்க முடியாது. “சபையைக் குறித்து என்ன?” நல்லது, சபையைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. அது சம்பிரதாய முறைமையாகிவிட்டது. அவர்கள் ஒரு பானை கூழுக்காக தங்கள் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுவிட்டனர். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இந்த தேசத்தைக் கடந்து சென்று, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அவர்களோ அவருடைய கிருபையை தொடர்ந்து இகழுகின்றனர். அவர் தம்மை உறுதிப்படுத்தி, அவருடைய மகத்தான உறுதிப்படுத்தலின் மூலம், அவர் இந்நாளில் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர்களோ அதைப் புறக்கணித்துக் கொண்டேயிருக்கின்றனர். பாருங்கள்? இப்பொழுது ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை. நீங்கள் எப்பொழுதுமே தேவனிடம் அப்படி செய்து கொண்டிருக்க முடியாது. பாருங்கள்? 47 சரி, நாம் காண்பது என்னவெனில், அவர் முதலாவதாக தமது தீர்க்கதரிசிகளை எச்சரிக்கையுடன் அனுப்புகிறார். அவர் தமது வழியை, செய்ய முறையை மாற்றிக் கொள்வதில்லை. அவர்களை அவர் எச்சரிக்கும் போதே தாக்குவதில்லை. இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். தேவன் எச்சரிக்கிறார். ஆனால் அவர் எச்சரிக்கும் அதே நேரத்தில் தாக்குவதில்லை. அவர் எச்சரிக்கை அனுப்பும் போதே தாக்காததால், தீர்க்கதரிசி கேலி செய்யப்படுகிறான். அவர்கள், “உனக்கு அது கிடையாது. நீ பொய் சொன்னாய். நீ சொன்னது உண்மையல்ல”, என்கின்றனர். அதேவிதமாக அவர்கள் ஏசாயாவையும் கூட சொல்லியிருப்பார்கள். அவன் ராஜாவிடம் சென்று, “நீர் மரிக்கப் போகிறீர்” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் வந்து, “இல்லை, அவர் உயிர்வாழப் போகிறார்” என்று கூறினதைக் குறித்து அவன் என்ன நினைத்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? 48 யோனா தெருக்களின் வழியாக சென்று, “ஓ, இந்தப் பட்டினம் இத்தனை நாட்களுக்குள், நாற்பது நாட்களுக்குள் அழிக்கப்படும்” என்று சொல்லிவிட்டு, தேவன் அதை செய்யாமலிருந்தாரே, அதைக் குறித்து என்ன? பாருங்கள், நீங்கள் கவனிக்க வேண்டும், தேவன் எச்சரிக்கும் போது, அவர் தாக்குவதில்லை. ஆனால் அவர் ஆனால் ஒரு காரியம், அப்பொழுது தீர்க்கதரிசி கேலி செய்யப்படுகிறான். அவன் தேவனுடைய வார்த்தையைக் கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்து தேவனுடைய அடையாளங்கள் அவனை உறுதிப்படுத்துமானால்; தீர்க்கதரிசிகள் உறுதிப்படுத்தப்படுவார்கள் என்று தேவன் உரைத்துள்ளார் (இந்த மனிதர் அவ்விதமே இருந்தனர்). பாருங்கள், அப்படியானால் அது அவனுடைய வார்த்தையல்ல, அது தேவனுடைய வார்த்தை, அது நிறைவேறும். அது தேவனுடைய வார்த்தையாயிருக்குமானால், அது நிறைவேறியே ஆகவேண்டும். அதை நிறுத்தக்கூடியது ஒன்றே ஒன்று மாத்திரமே, அது விரைவாக மனந்திரும்புதலே. 49 கவனியுங்கள், ஆமோஸ் தன் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைக் காண உயிரோடிருந்தான். ஆனால் ஆமோஸ் அந்த நகரத்துக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைத்த போது அது எப்படி நடக்குமென்றும், எவ்வாறு சீரியர்கள் அதில் நுழைந்து அதை கைப்பற்றத் தேவன் செய்வார் என்றும், அவர்களுடைய கேடான வழிகளே அவர்களைத் தின்று போடும் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்த பிறகு, அது இப்பொழுது உரைக்கப்படுமானால்... நான் வேதவாக்கியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நான் சரியாக கணக்கிட்டிருந்தால், ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகட்குப் பிறகு தான் அது நிறைவேறினது. இப்பொழுது, நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ஆமோஸ் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு முன்பு ஒரு முழு சந்ததியே கடந்து சென்றது. ஆனால் இங்கே நீங்கள் படிப்பீர்களானால், அவன் உரைத்த தீர்க்கதரிசனம் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறினதாக அது கூறுகிறது. பாருங்கள்? யோவான், தான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் எழுதினவைகளைக் கண்டான். அது அவனுடைய காலத்தில் நடக்கவில்லை. ஆனால் அது அப்படியே நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம். பாருங்கள்? தானியேல் அவனுடைய காலத்தைக் குறித்தும், படிப்படியாக வரப்போகும் காலங்களைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்தான். ஆனால் அவை நிறைவேறுவதை காண அவன் உயிர்வாழவில்லை. அவர், “தானியேலே, முடிவு வரும் மட்டும் போயிரு. இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு, நீ இளைப்பாறிக் கொண்டிரு. ஆனால் அந்த நாளிலே நீ எழுந்திருப்பாய்” என்றார். பாருங்கள்? இப்பொழுது பாருங்கள்... நீங்கள் எப்பொழுதுமே... தேவன்... தீர்க்கதரிசனம் உரைத்தவுடனேயே தாக்குவதில்லை. நான் கூறின வண்ணமாக, ஆமோஸ் உரைத்த தீர்க்கதரிசனம் ஐம்பது ஆண்டுகள் கழித்து நிறைவேறினது. ஆனால் அது நிறைவேறினது! 50 ஒரு தீர்க்கதரிசி... வேதத்தில் காணப்படுபவன்... உண்மையான தீர்க்கதரிசி ஒரு விசேஷித்த நபர். “விசேஷித்தவன்” என்று சொல்லும் போது, அவன் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவன் என்றல்ல. ஆனால் அவனுக்கு விசேஷித்த பணி ஒன்றுண்டு. பாருங்கள்? அவன் விசேஷித்த கட்டளை பெற்றுள்ளதால், அதைச் செய்ய அவன் விசேஷித்தவனாக இருக்கவேண்டும் (மற்றவர்கள் வழக்கமாக இருப்பதை விட, சிறிது வேறு விதமாக). தேவன் தமது தீர்க்கதரிசிகளை ஒரு கழுகுக்கு ஒப்பிடுகின்றார். கழுகு ஒரு விசேஷித்த பறவை. அது பறவை தான். ஆயினும் அது சிறப்பான பறவை. அது மற்ற பறவைகளைவிட அதிக உயரத்தில் பறக்க முடியும். அது உயர பறப்பதற்கென, அதன் உடலமைப்பு உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். அது உயர பறந்த பிறகு அதனால் காண முடியவில்லையென்றால், அவ்வளவு உயர பறப்பதனால் அதற்கு என்ன பயன்? பாருங்கள்? எனவே அது சிறப்பான உடல் அமைப்பு கொண்ட ஒரு பறவையாக இருக்க வேண்டும், பாருங்கள்? அது பருந்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை. கிழித்து தின்ன அதற்கு அலகு உள்ளது. அது என்ன தின்னும் என்றால்... அவைகளில் பல, தோட்டிகள். கழுகுகளிலேயே நாற்பது வெவ்வேறு வகைகள் உள்ளன. 51 ஆனால், பாருங்கள், சபைக்கு ஒரு மேய்ப்பன் (Pastor) இருக்கிறார். அந்த மேய்ப்பன் ஒரு விசேஷித்த நபர். அவர் ஜனங்களுடைய வீண் சந்தடிகளை சமாளிப்பதற்கான அமைப்பு கொண்டவராயிருக்கிறார். அவர் சுமைகளை சுமக்கக் கூடியவர், அவர் குழுவின் காளை. அவர் அமர்ந்து கொண்டு... யாராகிலும் ஒருவருக்கு வேறொருவருக்கு எதிராக ஏதாகிலும் இருக்குமானால், அந்த இரு குடும்பங்களுடனும் உட்கார்ந்து (யாருடைய பக்கமும் சாராமல்), நியாயத்தை எடுத்துக் கூறி, அவர்களை மீண்டும் இனிமைக்குக் கொண்டு வரக்கூடியவர். பாருங்கள்? அவர் மேய்ப்பன், அவருக்கு காரியங்களை எப்படி கவனித்துக் கொள்வதென்று தெரியும். சுவிசேஷகன் (evangelist) ஒரு விசேஷித்த மனிதன். அவர் தீப்பந்து போல் எரிந்து கொண்டிருப்பவர். அவர் ஒரு நகரத்துக்குள் பிரவேசித்து, அவருடைய செய்தியைப் பிரசங்கித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு இடத்துக்குச் செல்கிறார். பாருங்கள், அவர் ஒரு விசேஷித்த மனிதன் போதகர் (teacher) ஒரு விசேஷித்த மனிதன். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு, பரிசுத்த ஆவியின் உதவியினால் தேவனுடைய வார்த்தைகளை ஒன்று சேர்க்கிறார். மேய்ப்பன் அல்லது சுவிசேஷகன், இவர்களில் ஒருவரும் கூட அவருடன் ஒப்பிடப்பட முடியாது. அதன்பிறகு, அப்போஸ்தலன் ஒரு விசேஷித்த மனிதன் என்று காண்கிறோம். அவர் ஒழுங்குபடுத்துபவர். அவர் காரியங்களை ஒழுங்குபடுத்த தேவனால் அனுப்பப்பட்டவர். 52 தீர்க்கதரிசி ஒரு விசேஷித்த மனிதன். தீர்க்கதரிசிக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகிறது. தீர்க்கதரிசியின் வாழ்க்கை எவ்வாறு உருவமைக்கப்பட்டிருக்கிறதென்றால், அவனுடைய உள்ளுணர்வும் (sub conscious) முதலுணர்வும் (first conscious) ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதால், அவன் சொப்பனம் காண உறங்கச் செல்வதில்லை. அவன் விழித்திருக்கும் போதே அதை காண்கிறான். பாருங்கள்? அது தேவன் தான் செய்ய வேண்டிய காரியமாகும். பாருங்கள், என்ன நடக்கிறதென்று தீர்க்கதரிசி காண்கிறான். ஒரு தீர்க்கதரிசி, இனிமேல் நிகழப் போகிறவைகளை முன்கூட்டியே காண்கிறான். அவன் தேவனுடைய கோபகலசத்தை, அது நிறைவதற்கு முன்பே காண்கிறான். பாருங்கள்? அவன் “கர்த்தர் உரைக்கிறதாவது! நீங்கள் மனந்திரும்பாவிட்டால், தேவன் இந்த நகரத்தை அழித்துப்போடுவார்” என்று கூற முடியும். ஏன்? அவன் ஒரு கழுகு. அவன் வெகு தூரம் உயர பறக்கிறான். பாருங்கள்? அந்த உயரத்திலிருந்து அவன் பார்க்கும் போது, தேவனுடைய கோப கலசம் ஊற்றப்படுவதை காண்கிறான். அதை தான் தீர்க்கதரிசி நோக்குகிறான். அவன் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண்பதில்லை, அவன் தூரத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறான். அதைப் பார்த்துவிட்டு அவன், “அது வருகிறது” என்கிறான். அவன் மிக உயரச் சென்று, அங்கிருந்து அவனால் அந்த நிழலைக் காண முடிகிறது. அவன், “இருள் பூமியை மூடும்” என்கிறான். அவன் போதிய அளவு உயரத்தில் இருப்பதனால், இப்பொழுது சூரியன் பிரகாசித்த போதிலும், வரப்போகும் அந்த இருளை அவனால் காணமுடிகிறது. அவன் காண்கிறதை அவன் உரைக்கிறான். அது இப்பொழுது இங்கில்லை, ஆனால் அது நிச்சயம் இங்கிருக்கும்! அது உண்மை. அது இங்கிருக்கும்; காரிருள் ஜனங்களை மூடுதல். அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அது வரப்போகிறது என்பதை அவன் அறிகிறான். ஆயினும் அவன் அதை இப்பொழுதே காண்கிறான். அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் இருளையும் நியாயத்தீர்ப்பையும் கண்டான். சீரியா தன் இரதங்களுடன் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டு ஜனங்களை பட்டயத்தால் வெட்டுவதை அவன் கண்டான். அவன் அது வருவதை, தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் வருவதைக் கண்டான்; அது நடப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், பாருங்கள், அவன் தீர்க்கதரிசியானதால், ஆவிக்குள் உயர்த்தப்பட்டு அதை தூரத்தில் கண்டான். பாருங்கள்? அந்த கலசம் நிறைவதற்கு முன்பே, அது நிறைந்திருப்பதைக் கண்டான். 53 ஆபிரகாமைப் போல. தேவன் ஆபிரகாமினிடம், “உன் சந்ததியார் இத்தேசத்தில் நானூறு ஆண்டுகள் பரதேசிகளாய் இருப்பார்கள். அதன் பிறகு அவர்களை நான் பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவேன், ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார். பாருங்கள்? அந்த கலசம் நிறைந்துவிடும் என்பதை தேவன் அறிந்திருந்தார். அவர் தன் தீர்க்கதரிசியுடன் பேசுகிறார். அவர் அவனிடம், “எமோரியரின் கலசத்தை பார்க்கிறாய் அல்லவா? ஆபிரகாமே, அவர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை. அதைக் குறித்து இப்பொழுது ஒன்றும் சொல்லாதே, பேசாமலிரு, ஆனால் அது நடக்கும். அவர்களுடைய கலசம் நிறையும்போது, நானூறு ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்பொழுது நான் உன் சந்ததியாருக்கு முன்பாக அவர்களை வெட்டுக்கிளிகளைப் போல் வெளியே துரத்துவேன், உன் சந்ததியார் இந்த தேசத்தை சுதந்தரிக்கும்படி செய்வேன்” என்றார். ஆமென்! அதுதான் கர்த்தருடைய தீர்க்கதரிசி. 54 தீர்க்கதரிசி தன் தரிசனத்தைக் குறித்து பேசுகையில், அது கோபமோ அல்லது சுகம் பெறுதலோ என்னவாயினும், அது நிறைவேறத் தாமதிக்கக் கூடும், ஆனால் அவன் கர்த்தருடைய நாமத்தினால் அதை உரைத்தால், அது நிறைவேறியே ஆகவேண்டும். பாருங்கள்? ஒருக்கால் அவன் உங்களுக்கு வரப் போகும் ஆசீர்வாதத்தை உரைக்கலாம், உங்களால் அதைக் காணமுடியாது. நீங்கள், “அது எப்படி முடியும்? ஏன், அது ஒரு... நான், நான், நான்... அவர், 'கர்த்தர் உரைக்கிறதாவது', 'இது நடக்கப் போகிறது, அது நடக்கப் போகிறது' என்றார். இது நடக்கவேயில்லை. அந்த மனிதன் தவறாகக் கூறிவிட்டார்” எனலாம். நீங்கள் அதை அவிசுவாசித்ததால், நியாயந்தீர்க்கப்படுவீர்கள். அது எப்படியும் நடக்கும். பாருங்கள்? அது நடந்தேயாக வேண்டும். “அது தாமதித்தாலும், அதன் காலத்திலே அது விளங்கும், அது நிச்சயமாய் வரும்” என்று வேதம் உரைக்கிறது (ஆபகூக்: 2:3). 55 தீர்க்கதரிசி நோக்கிப் பார்த்து ஏதோ ஒன்றைக் காண்கிறான். அவன் எதை நோக்குகிறானோ அதைக் குறித்து பேசுகிறான். அவன் இங்குள்ளதைப் பற்றியோ அல்லது நீங்கள் இப்பொழுது எப்படி காணப்படுகிறீர்கள் என்பதைப் பற்றியோ சிந்திப்பதில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை அவன் காண்கிறான். அவன் அதை பேசுகையில், அது கர்த்தருடைய வார்த்தையில் இருக்குமானால், அது ஏற்கனவே உரைக்கப்பட்டுவிட்டது, உலகத்திலுள்ள எதுவுமே அதைதடுத்து நிறுத்த முடியாது (பாருங்கள், அது உண்மை), தேவன் மாத்திரமே அதை நிறுத்தமுடியும். கவனியுங்கள், நாம் காண்கிறது என்னவெனில்... அவன் தன் தரிசனத்தை உரைக்கிறான், தீர்க்கதரிசி அவ்விதம் செய்கிறான். இப்பொழுது, சில நேரங்களில், அவன் நன்மையானவைகளைப் பேசுகிறான், நீங்கள் சுகமடையப் போவதைக் குறித்துப் பேசுகிறான். சரி, நீங்கள் நினைக்கலாம், “அது நடக்கவே முடியாது, நான் சிறிதும் கூட தேறவில்லை” என்று. அப்பொழுது அது என்ன செய்கிறது? அது தேவனுடைய நியாயத்தீர்ப்பை உங்கள் மேல்கொண்டு வருகிறது. அது உண்மை. பாருங்கள்? நீங்கள் விசுவாசித்தால், உங்களை இரட்சிப்பதாக இயேசு வாக்களித்துள்ளார். அதை நீங்கள் விசுவாசிக்காமல் போனால், அது உங்களுக்கு நடக்காது. அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்க வேண்டும். பாருங்கள்? அது எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அதுஉங்களுக்கு தேவன் பேரில் விசுவாசத்தை அளிக்கிறது; அல்லது உங்கள் தீர்க்கதரிசியின் பேரில் பாருங்கள்? அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். 56 இங்கு நாம் காண்பது என்னவெனில், இந்த தீர்க்கதரிசிகள் உரைத்தனர். அவர்கள் உரைத்தவை நிறைவேறின. தேவ கோபாக்கினை ஜனங்களின் மேல் ஊற்றப்படும் போது, ஒரு காரியம் மாத்திரமே... ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று அந்த தீர்க்கதரிசி உரைத்திருந்தால், தேவனுடைய கரத்தை நிறுத்தக் கூடியது ஒரே ஒரு காரியம் மாத்திரமே, அது தான் மனந்திரும்புதல். தேவனுக்கு முன்பாக மனந்திரும்புதல் அவருடைய கோபத்தை நிறுத்துகிறது. அப்படியானால் அதற்காக காத்திருக்காதீர்கள், இப்பொழுதே அதை செய்யுங்கள்! தேவன் ஒன்றைக் கூறுவாரானால், அதை உடனே செய்யுங்கள். 57 எசேக்கியா, அதை தெரிந்து கொண்ட மாத்திரத்தில்... அவன் நல்லவன், ஆனால் தேவன், “எசேக்கியாவே, உன் நேரம் வந்துவிட்டது. உன்னை நான் எடுத்துக் கொள்ளவேண்டும், அவ்விதம் நான் செய்ய வேண்டும். உன்னை நான் மேலே எடுத்துக் கொள்ளப் போகிறேன். உன் வீட்டுக் காரியம் அனைத்தையும் ஒழுங்குபடுத்து” என்றார். அவன், “கர்த்தாவே, அதை செய்ய எனக்கு பதினைந்து ஆண்டுகள் பிடிக்கும்” என்றான். பாருங்கள்? “இப்பொழுது நீர் தான்... நான் போக வேண்டுமென்று அறிந்திருக்கிறேன், ஆனால் என் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்த எனக்கு பதினைந்து ஆண்டுகள் பிடிக்கும். என்னால் இப்பொழுதே அதை செய்ய முடியாது. அதைச் செய்ய எனக்கு நேரமில்லை. என்னால் அதை செய்து முடிக்கவே முடியாது. கர்த்தாவே, நான் இன்னும் பதினைந்து ஆண்டுகள் வாழட்டும், அப்பொழுது இவைகளை என்னால் செய்து முடிக்க முடியும். இல்லையெனில் என் வீட்டுக் காரியங்களை நான்...” என்றான். பாருங்கள், தேவனுடைய கட்டளை, “உன் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்”, என்பதே. எசேக்கியா, “இந்த ஆண்டில் அதை என்னால் செய்து முடிக்க முடியாது, அதற்கு நேரம் பிடிக்கும். இதை நான் எடுத்துக் கொண்டு, இதனுடன் சமரசமாகி, இதை அந்த ஆளிடம் கொண்டு செல்ல வேண்டும். அதைச் செய்ய எனக்கு பதினைந்து ஆண்டுகள் பிடிக்கும். அதற்காக என் உயிரை எடுத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடும். எனக்கு சிறிது நேரம் தாரும்” என்றான். பாருங்கள்? அப்பொழுது தேவன், “நான் - நான் - நான் - நான் தயவு காட்டுவேன்” என்றார். 58 அதன் பிறகு, அவன் தன் நேரத்தை எடுத்துக் கொண்டு, அந்த நேரத்தில் பின்மாற்றமடைந்தான். பாருங்கள்? அவன் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தாமலேயே போய் விட்டிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும். அது உண்மை. அவனுடைய வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்த அவர் அவனுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் அதிகமாக தந்தார். ஏனெனில், விரைவாக, அவன் என்ன செய்தான்? அவன், “கர்த்தாவே, நான் தாமதமாக காரியங்களைச் செய்பவன். இதைச் செய்ய எனக்கு பதினைந்து ஆண்டுகள் தேவை. என் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்த வேண்டுமென்று எனக்கு நீர் கட்டளையிட்டீர். எனக்கு இங்கு கடன் உள்ளது. அதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அடைத்து தீர்க்கமுடியாது. எனக்கு இங்கே அது உள்ளது, அங்கே அது உள்ளது. இவைகளை நான் செய்ய வேண்டும்” என்றான். அவன் தேவபக்தியுள்ள மனிதன், தேவனுடைய வார்த்தை எப்படியும் நிறைவேறியே ஆகவேண்டும். ஆனால் அவன் அந்த காலத்தை சிறிது அதிகமாக நீட்டிக் கொண்டான். அந்த காலத்தின் போது, அவன் ஒரு பாவம் செய்தான். அவர், “அதை அவன் மேல் வரப்பண்ணாமல், அவனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளைகளின் மேல் வரப்பண்ணுவேன்” என்றார். உங்களுக்கு அந்த வரலாறு தெரியும். 59 இப்பொழுது, விரைவாக மனந்திரும்புதல் கோபாக்கினையை சிறிது காலம் நிறுத்தி வைக்கிறது என்று நாம் காண்கிறோம். நாம் காண்பது என்னவெனில், நினிவே... தேவன் யோனாவிடம், “அந்த பட்டினத்துக்குச் சென்று அதற்கு விரோதமாக கூக்குரலிட்டு, அவர்களிடம், 'நீங்கள்... இன்னும் நாற்பது நாட்களில் இது கவிழ்க்கப்படப் போகிறது' என்று சொல்” என்றார். என்னே, அவர்கள் மனந்திரும்பினார்களா? அந்த தீர்க்கதரிசி தெருவின் வழியாக நடந்து வந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது. இந்த இடம் இன்னும் நாற்பது நாட்களில் கவிழ்க்கப்பட்டு போகும், இந்த இடம் கவிழ்க்கப்பட்டு போகும்” என்று உரைப்பதை அவர்கள் கேட்ட போது... ராஜாவும் கூட, தேசம் முழுவதும் உபவாசம் செய்து, இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனஸ்தாபப்படும்படி கட்டளையிட்டான். “உங்கள் தலையிலும், சரீரத்திலும், மாம்சத்திலும் இரட்டுடுத்தி சாம்பலை போட்டுக் கொள்வது மாத்திரம் போதாது. உங்கள் மிருகங்களுக்கும், வயலிலுள்ள உங்கள் மாடுகளுக்கும் இரட்டுடுத்தி, அவை சாம்பலில் உட்காரச் செய்யுங்கள்” என்றான். என்னே ஒரு மனந்திரும்புதல்! 60 இப்பொழுது, நாம் என்ன காண்கிறோம் என்றால், தீர்க்கதரிசி கவனமாயிருந்து, புத்தியோடு தேவனுடைய சமுகத்தில் செல்லாமல் போனால், அங்கு ஏதோ ஒன்றை கண்டுகொள்வீர்கள், நீங்கள் கவனமாயிராமல் போனால்... இப்பொழுது ஏசாயாவைப் பாருங்கள், அவன் தன் தீர்க்கதரிசனத்தை உரைத்துவிட்டு, வனாந்தரத்திலுள்ள தன் சிறு குடிலுக்குச் சென்றுவிட்டான். அவன் அவ்விதம் செய்தபோது, ஜெபித்துக் கொண்டிருக்கிற ராஜாவுக்கு கர்த்தர் மாறுத்தரம் கொடுக்கவில்லை. காரியங்களைச் செய்ய அவருக்கு ஒரு பிரத்தியேக முறை உண்டு. அந்த தேசத்தில் ஒரு தீர்க்கதரிசி இருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. அவர் அங்கு சென்று, “ஏசாயாவே, ராஜாவிடம் சென்று அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று அவனிடம் சொல், நான் அறிந்து கொண்டது என்னவெனில்... இதைச் செய்ய அவனுக்கு பதினைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்று அவன் எண்ணுகிறான். அவனுடைய கண்ணீரைக் கண்டேன். அவனுடைய வேலையை செய்ய வேண்டுமென்று முழு மூச்சுடன் இருக்கிறான். அதைச் செய்து முடிக்க அவனுக்கு பதினைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறுகிறான். அவனுக்கு அதை தருவேன் என்று அவனிடம் போய்ச் சொல்” என்றார். பாருங்கள்? ஏன்? அவர் கட்டளையிட்டார். அவர் ஏசாயாவிடம், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று அவனிடம் போய்ச் சொல்லும்படி கட்டளையிட்டார். அதில் ஏதாகிலும் மாறுதல் அல்லது தாமதம் இருக்குமானால்... அது எப்படியும் நடந்தே தீரும். அவன் எப்படியும் மரித்துபோனான். ஆனால்... அதில் ஏதாகிலும் மாறுதல் இருக்குமானால், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் தீர்க்கதரிசியை அனுப்பின அந்த மனிதனிடம் அவர் திரும்பி வருவதற்கு கடமைபட்டிருக்கிறார். அவர் ஏசாயாவிடம், “நீ மறுபடியும் போய் அவனிடம் சொல்” என்றார். 61 இப்பொழுது, யோனா, வேறுபட்ட மனப்போக்கை உடையவனாயிருந்தான். அவன் மலையின் மேலேறி, “நான் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும்” என்றான். ஓ, அவன் எவ்வாறு இவ்விதம் சொல்லிக் கொண்டே போனான்! கர்த்தர் ஒரு சிறு ஆமணக்கு செடியை முளைக்கக் கட்டளையிட்டு அவனுக்கு நிழலுண்டாக்கி, அவனுக்கு குளிர் தரும்படி செய்தார். அவன், “நான் இப்பொழுது அங்கு போனால், அவர்கள் என்னைக் கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைப்பார்கள்” என்றான். தேவன் அவனிடம், “யோனாவே, அந்த நகரத்தை பார். அங்கு பார். நகரம் முழுவதுமே இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்து மனஸ்தாபப்படுகிறது” என்றார். அதன்பிறகு அவர் அவனிடம் அந்த சிறு ஆமணக்கு செடியையும் பூச்சி அதை அரித்துப் போட்டதைக் குறித்தும் கூறினார். கர்த்தருக்கு சித்தமானால், ஒரு சமயம் நான் இந்த கூடாரத்துக்கு வந்து, யோனாவின் பேரில் தொடர் பிரசங்கங்களை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன். ஓ, அதில் அரிய பெரிய... அந்த கீழ்க்காற்று வீசுவதும், மற்ற காரியங்களும், ஓ, என்னே! அதில் அநேக காரியங்கள் அடங்கியிருக்கின்றன. அது சிலிர்ப்பூட்டும். அதில் தங்கப் பாளங்கள் புதைந்துள்ளன. அவை எல்லாமே சரியாக அதில் நிழலாயிருக்கின்றன. அது இயேசு கிறிஸ்துவையும் கூட அதில் கொண்டு வருகிறது. வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் இயேசு கிறிஸ்துவை கொண்டு வருகிறது என்பது உண்மையே. ஆம், ஐயா. அது தான் நமது ஞாயிறு பாடமாக இருக்கப் போகின்றது. கர்த்தருக்கு சித்தமானால், அதை நாம் காண்போம். 62 கவனியுங்கள், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள். நீங்கள் உத்தமமாயிருந்து தேவனிடம் கூறினால்... நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். இப்பொழுது, மேடையிலுள்ள மற்றொரு யோனாவை இன்றிரவு உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். ஓரிரவு ஜனங்கள் இங்கு வந்திருந்தனர். அந்த ஸ்திரீ (அவளுடைய ஜனங்களில் சிலர்) இன்றிரவு இங்கிருக்கக் கூடும். எனவே நான் பெயரைச் சொல்லப் போவதில்லை. அது யாரென்று உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கும். அவர்கள் இங்கு வந்திருந்தனர், மிகவும் அருமையான ஜனங்கள், கென்டக்கியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அநேக ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கின்றனர், அவர்கள் எனக்கு நல் நண்பர்கள். ஆனால் அவர்கள்... எழுப்புதல் நடந்து கொண்டிருக்கும் போது சபைக்கு வருபவர்கள், எழுப்புதல் முடிந்தபிறகு, பாரம் அதிகமாகும் போது, யாருமே இழுக்காத அத்தகைய வகையைச் சேர்ந்தவர்கள். நாம் வகுப்புகள் நடத்தும் போது, அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் தொட்டில் பட்டியலில் (cradle roll) இடம் பெற்றிருந்தனர். 63 ஒருநாள் நான் வீட்டுக்கு வந்தேன், அது ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும், அப்படி ஏதோ ஒன்று. இந்த இளம் பெண் (அவள் தொட்டில் பட்டியலில் இடம் பெற்றிருந்த போது, அவளுக்கு ஏறக்குறைய எட்டு வயதிருக்கும்) விவாகம் செய்து, அவளுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவள் மரணத் தருவாயில் இங்குள்ள மருத்துவமனையில் கிடந்திருந்தாள். அவள் நான்கு அல்லது ஐந்து மாத கர்ப்பிணியாயிருந்தாள். குழந்தை வயிற்றில் இறந்துவிட்டது. அவளுக்கு சிறுநீர் சேர்க்கையினால் இரத்தம் கெட்டிருந்ததால் (uremic) அவர்களால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே அந்நிலையில் தாயும் மரித்துப்போக வேண்டும். அறுவை சிகிச்சை செய்ய முடியாது. பாருங்கள், அந்த குழந்தை தாயை கொன்றுவிடும். எனவே அவர்கள்... அவள் மரித்துக் கொண்டிருந்தாள், அவ்வளவு தான், அவள் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவளைக் காண நான் சென்றிருந்தேன். அவள் ஆள்விட்டு என்னை அழைத்திருந்தாள். நான் மருத்துவமனைக்குள் சென்றேன். அவள் அங்கு பிராணவாயு கூடாரத்தில் கிடத்தப்பட்டிருந்தாள். நான் கூடாரத்தின் துணியை சிறிது உயர்த்தி, அவளுடன் சிறிது பேசினேன். நான், “என்னை உனக்கு ஞாபகமிருக்கிறதா”? என்று கேட்டேன். அவள், “நிச்சயமாக, சகோ. பில், உங்களை எனக்கு ஞாபகமிருக்கிறது” என்றாள். நான்,“எப்படி உனக்கு... நீ எவ்வளவாக வியாதிப்பட்டிருக்கிறாய் என்பதை அறிந்திருக்கிறாயா? என்று கேட்டேன். அவள், “நான் அறிந்திருக்கிறேன். அதற்காகத் தான் நீங்கள் வரும்படி ஆளனுப்பினேன்” என்றாள். நான், “நல்லது, உனக்கும் கர்த்தருக்குமிடையே எவ்வாறு உள்ளது?” என்று கேட்டேன். அவள், “சகோ. பில், நான்... நான் போக ஆயத்தமாயில்லை” என்றாள். நல்லது, நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபித்தோம். அந்த அறையில் அவளுடைய தாயாரும் கணவரும், இன்னும் பலரும் இருந்தனர். அவளுடைய தாயாரும் கணவரும் அழத் தொடங்கினர். அதன் பிறகு அவளை நான் கேட்டேன். அவள் தேவனுடன் சரிசெய்து கொண்டாள் (அவள் திரும்பி வந்தால் அவளுடைய பொருத்தனைகளைச் செலுத்துவதாக தேவனுக்கு வாக்கு கொடுத்தாள்; அவள் மன்னிக்கப்பட்டிருந்தால்; அவள் எவ்வளவாக அவரை நேசித்தாள், அவள் வாழ்ந்து கொண்டிருந்த விதத்துக்காக, அவளுடைய பாவங்களுக்காக அவள் வருத்தம் தெரிவித்தாள்). இப்படியாக அவள் மனஸ்தாபப்பட்டு அழுதாள். சற்று நேரம் கழிந்து நான் எழுந்து கட்டிடத்தை விட்டு வெளியே வந்தேன். 64 அடுத்தநாள் காலையில் அவர்கள் என்னை தொலை பேசியில் கூப்பிட்டு, அங்கு மறுபடியும் வரும்படி அழைத்தனர். நான் என்ன கண்டு கொண்டேன் என்றால், அன்று காலை அவர்கள் சிறுநீரினால் இரத்த பாதிப்பு எவ்வளவாக அதிகரித்திருக்கிறது என்று காண பரிசோதனை நடத்தியபோது, அது ஒரு துளி கூட இல்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அது முற்றிலும் போய்விட்டிருந்தது. ஒவ்வொரு துளி சிறுநீர் விஷமும் அவளை விட்டுப் போயிருந்தது. மருத்துவர்கள் இதைக் கண்ட போது மிகவும் ஊக்கமடைந்து, “என்னே! இதை நாம்... இது மிகவும் வினோதமான ஒன்று என்று சொல்லிவிட்டு”, அவளை நாம் அறுவை சிகிச்சைக்காக ஆயத்தப்படுத்துவோம். அடுத்த நாள் காலை வரைக்கும் இதே நிலைநீடிக்குமானால்... அவளுக்கு நாம் பெனிசிலின் கொடுத்துக் கொண்டேயிருந்து அல்லது அவர்கள் கொடுத்த வேறெதாவதொரு மருந்து தொற்று கிருமிகள் வராமல் தடுத்துக் கொண்டிருப்போம். வேறெதாவது உடலில் உண்டாவதற்கு முன்பு, நாம் அறுவை சிகிச்சை செய்து, இறந்த குழந்தையை வெளியே எடுத்துவிடுவோம். அவளுடைய நிலை சரியாயிருந்தால், அப்பொழுது... என்றனர். 65 நல்லது, பகலில் அவர்கள் இரண்டு மூன்று முறை அவளை பரிசோதனை செய்தனர். மறுபடியும் நள்ளிரவில் அவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். எதுவுமே தவறாயிருக்கவில்லை, முற்றிலும் சரியாயிருந்தது. அவர்கள் அவளை ஆயத்தம் செய்தனர். அவளை பிராணவாயு கூடாரத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். எல்லாம் நன்றாக இருந்தது. அடுத்த நாள் காலையில் அவர்கள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுத்துவிட வேண்டுமென்றிருந்தனர். நல்லது, நான் அங்கு சென்றேன். அவளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதால்... இப்பொழுது, அதை நான் அறியவேயில்லை, நான் அறியவேயில்லை, கர்த்தர் என்னிடம் அதைக் குறித்து எதுவுமே கூறவில்லை. நீங்கள் விரும்பினால், ஜனங்களைக் கேட்டுப் பாருங்கள். எனவே அவர்கள். அவர்... இப்படி நடக்கும் என்று அவர் என்னிடம் கூறவேயில்லை. ஆனால், ஓ, என்னே, அப்படிப்பட்ட ஒன்றைக் காண்பது! பாவியான அவளுடைய கணவர் என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, என் ஜீவியத்தை நான் கர்த்தராகிய இயேசுவுக்கு அளிக்கப் போகிறேன்” என்றார். நான், “சரி, இங்கு முழங்கால்படியிட்டு, உங்கள் மனைவியின் கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருவருமாக சேர்ந்து இந்த நேர் வாழ்க்கையில் நடவுங்கள்” என்றேன். 66 தாய் என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, உமக்குத் தெரியும், இதோ நானும் என் பிள்ளைகளும். நாங்கள் அனைவரும் இந்த கூடாரத்தில் உள்ளேயும் புறம்பாகவும், உள்ளேயும் புறம்பாகவும் இருந்து வந்திருக்கிறோம். நாங்கள் உட்கார்ந்து நீர் பிரசங்கிப்பதைக் கேட்டு, பீடத்தண்டை சென்று திரும்பி வந்திருக்கிறோம். சகோ. பிரான்ஹாமே, நானும் பின் மாற்றமடைந்துள்ளேன். அவர் என் மகளுக்குச் செய்த நன்மையின் நிமித்தம், நான் கர்த்தராகிய இயேசுவினிடம் திரும்பி வர உத்தேசிக்கிறேன்” என்றாள். நல்லது, பாருங்கள், அது மிகவும் அருமையானது தான், ஆனால் நீங்கள் அதன் காரணமாக கர்த்தராகிய இயேசுவினிடம் வருவதில்லை. நள்ளிரவு, பன்னிரண்டு ஒரு மணிக்கு, அவளுடைய தாயார் சிறிது உறங்கிவிட்டாள். அவள் தாயைக் கூப்பிட்டு, “அம்மா”, என்றாள். தாய், “தேனே, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள். மகள், “உங்களுக்குத் தெரியுமா, நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்” என்றாள். தாய், “நீ சந்தோஷமாயிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றாள். மகள், “நான் தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறேன். ஓ, அது எவ்வளவு அருமையாயுள்ளது!” என்றாள். சில நிமிடங்களில் மீண்டும் அவள் திரும்ப அழைத்தாள், அவள், “அம்மா”. தாய், “அப்படியா?” என்றாள். மகள், “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்றாள். தாய், “அது எனக்குத் தெரியும். ஆம், இனியவளே, மருத்துவர் நாளை குழந்தையை வெளியே எடுத்துவிடுவார். இன்னும் ஓரிரண்டு நாட்களில், கத்தியால் வெட்டின் பாகங்கள் குணமானவுடனே, இங்கிருந்து வீடு சென்று, நீயும் உன் கணவரும் பிள்ளைகளும் சந்தோஷமாயிருங்கள். ஒரு கிறிஸ்தவளாக இருந்து, தேவனுக்காக வாழ்வாயாக” என்றாள். மகள், “அம்மா, நான் பரம வீட்டிற்கு போகிறேன் என்று தான் கூறுகிறேன்” என்றாள். தாய், “நிச்சயமாகவா, தேனே, பயணத்தின் முடிவுக்கு வந்துவிட்டாயா?” என்று கேட்டாள். மகள், “இதுவே என் பயணத்தின் முடிவு” என்றாள். தாய், “ஓ, என்ன விஷயம்?” என்றாள். மகள், “பயணத்தின் முடிவு, ஆம், அம்மா, இன்னும் நில நிமிடங்களில் நான் போய்விடுவேன்” என்றாள். அவள் பயமடைந்து பிதற்றுவதாக தாயார் எண்ணினாள். தாய் நர்ஸைக் கூப்பிட்டாள். நர்ஸ் மூச்சை அளந்து பார்த்தாள். எல்லாமே சரியாக இருந்தது. ஐந்தே நிமிடங்களில் அவள் போய்விட்டாள். அவள் மரித்துப் போனாள். இது நடந்து ஓரிரண்டு வாரங்கள் கழித்து நான் வீடு திரும்பிய போது... சகோ. கிரகாம் பெண்ணின் அடக்க ஆராதனையின் போது பிரசங்கித்தார் என்று நினைக்கிறேன். நான் வீடு திரும்பிய போது, அந்த பெண் அன்றிரவே மரித்துவிட்டதாக என் மனைவி என்னிடம் கூறினாள். என்னே, என்னால்... நான் தாயைக் காணச் சென்றேன். ஆம்... 67 இதைச் செய்ய என்னை தூண்டியது எதுவென்று எனக்குத் தெரியவில்லை. நான், “கர்த்தராகிய தேவனே, இதற்கு நீர் எனக்கு விளக்கம் தர கடன்பட்டிருக்கிறீர். அங்கு நான் சென்று, அவளுடைய கணவரிடம் நான் சொல்லி, இவைகளை அவருக்கு நீர் செய்த பிறகு, அவர் கர்த்தரிடம் வந்து, இவையெல்லாம் நடந்த பிறகு, அந்த பெண்ணின் ஜீவனை எடுத்துக் கொண்டீரே, அதற்கு எனக்கு ஒரு விளக்கம் தர கடன்பட்டிருக்கிறீர்” என்றேன். அவ்விதம் ஏதாவதொன்றை நீங்கள் தேவனிடம் கேட்டால், நீங்கள் தனியே உட்கார்ந்திருக்கும்படி அவர் விட்டு விடுவார். எனக்கு... அவர் எனக்கு ஒன்றும் கடன்பட்டிருக்கவில்லை, நான் தான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். நல்லது, சில நாட்கள் நான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருக்கும்படி அவர் என்னை விட்டுவிட்டார். இதற்குப் பிறகு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து, நான் ஆற்றங்கரையில் இருந்தபோது, கர்த்தர் தரிசனத்தில் என்னோடு பேசி, “நீ தாயிடம் சென்று அவளிடம், இதற்கு முந்தின் ஆண்டில், மகள் 'பிக்னிக்' சென்றிருந்த போது, ஆற்றில் அவள் மூழ்கிவிட இருந்த போது அவளுடைய நேரம் வரவில்லையா? அவள் அப்பொழுதே போய்விட்டிருக்க வேண்டும். ஆனால் அவள் போக ஆயத்தமாயிருக்கும் போது அவளை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றிருந்தேன்”. ஆகையால் தான் இவையெல்லாம் நடந்தது, “அதற்காகத் தான் அங்கு நீ சென்றிருந்தாய் என்று நான் கூறினதாகச் சொல்” என்றார். நான் முழங்கால்படியிட்டு கதறினேன். நான், “கர்த்தராகிய இயேசுவே, என்னை மன்னியும். மதியீனனான உம்முடைய ஏழை ஊழியக்காரன். நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது” என்றேன். 68 நான் அந்த ஸ்திரீயினிடம் சென்றேன். அவள் மார்கெட் தெருவில் வசித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று, “உன்னை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்” என்றேன். அவள், “சகோ. பில், கேளுங்கள்” என்றாள் நான், “இந்தப் பெண் ஏறக்குறைய மூழ்கினது உண்மையா?” என்று கேட்டேன். அவள், “சகோ. பில், அது உண்மை. அவளுடைய கணவரும் மற்றவர்களும் அவளை தூக்கி வெளியே கொண்டுவர வேண்டியதாயிற்று. அவர்கள் அழுத்தம் கொடுத்து செயற்கை சுவாச முறையை (artificial respiration) கையாண்டனர். அவர்கள் இயந்திரத்தின் உதவியைக் கொண்டு அவளுக்குள் இருந்த தண்ணீரை வெளியே பம்ப் (Pump) செய்தனர். அவள் குட்டை பாவாடையை அணிந்திருந்தாள். அவர்கள் 'பிக்னிக்' (picnic) சென்றிருந்தனர். அவள் ஆற்றுக்கு சென்று, மணலின் மேல் கால் வைத்தபோது, தலைகீழாக வழுக்கி விழுந்து தண்ணீரில் மாட்டிக் கொண்டாள். அவர்கள் அவளை கவனிக்கவில்லை. அவள் மேலே வருவதும் மூழ்குவதுமாக அவர்கள் கண்ட போது, அவர்கள் ஓடிப் போய் அவளைத் தூக்கியெடுத்துக் கொண்டு வந்தனர். அவள் ஏறக்குறைய மரித்துப் போனாள்” என்றாள். நான், “அவள் போக வேண்டிய நேரம் அதுவே” என்றேன். பாருங்கள், தேவன், தாம் என்ன செய்கிறார் என்பதை அறிந்திருக்கிறார். “ஆண்டவரே, அதைக் குறித்து எனக்குச் சொல்ல நீர் கடன்பட்டிருக்கிறீர்” என்னும் மனப்பான்மையை நான் உடையவனாயிராமல் இருந்திருந்தால், அவர் ஒருவேளை எனக்கு அப்பொழுதே தெரியப்படுத்தியிருப்பார். அவர் எனக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. 69 ஓரிரவு நான் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது வியாதிப்பட்டிருந்த ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு சுவிசேஷகர், “தேவனே, இவருக்கு சுகமளிக்கும்படி உமக்கு கட்டளையிடுகிறேன்” என்றார். யார் தேவனுக்குக் கட்டளையிடுவது? பாருங்கள், அது புத்தியுள்ள காரியமல்ல. ஏனெனில் தேவன், தாம் செய்ய விரும்புவதையே செய்கிறார். களிமண் குயவனைப் பார்த்து, “என்னை ஏன் இப்படி வனைந்திருக்கிறாய்?” என்று கேட்க முடியுமா? பாருங்கள்? நிச்சயமாக முடியாது. தீர்க்கதரிசி அமைதியாக இருந்து பதில் பெற கர்த்தரைத் தேடினால், நிச்சயமாக பதில் கிடைக்கும். பாருங்கள்? சர்ப்பத்தின் வித்தின் பேரில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் இந்நபரைப் போல, பாருங்கள். கவனித்துக் கொண்டேயிருங்கள், மிகவும் அவசரப்படாதீர்கள். கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நிறைவேறும்படி செய்வார். 70 நினிவே மனந்திரும்பாமல் போயிருந்தால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் விழுந்திருக்கும். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், தீர்க்கதரிசி செவி கொடுக்க வேண்டும். அது ஒரு எச்சரிக்கை. இந்த தேசத்துக்கும் அதுவேதான். நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, 'இந்த தேசத்துக்கு நம்பிக்கை அற்றுப் போய்விட்டது' என்று சென்ற ஞாயிறு கூறினீர்களே” எனலாம். ஆம். ஏன்? அது தான் அழைப்பை இகழ்ந்தது. அது நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்ளவேண்டும், அது பெற்றுக் கொள்ளப் போகிறது. இந்த தேசம் சுக்கு நூறாக உடைய வேண்டிய ஒரு நேரம் வருகிறது. அதை நான் 1933-ம் ஆண்டில் கண்டேன். பாருங்கள்? அதை நான் தூரத்தில்... நீங்கள், “அப்படியானால் அது நடக்கவில்லையே” என்று கூறலாம். அது நடக்கும்! நான் தரிசனம் கண்ட அந்நேரத்தில் முசோலினி அதிகாரத்தில் இல்லை, மகினாட் எல்லை கட்டப்படவில்லை, கார் முட்டை வடிவத்தில் இல்லை, கல்லூரி மாணவனைப் போன்ற ஒருவரை ஸ்திரீகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவில்லை, கத்தோலிக்க ஜனாதிபதி இருக்கவில்லை. முப்பது அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பே இவை முன்னுரைக்கப்பட்டன. முடிவு வரைக்கும் என்ன நடக்குமென்பதை அவர் எனக்குக் காண்பித்தார். அந்த காரியம், காலாகாலங்களில் அணுகிக் கொண்டிருக்கும்போது, அந்த கலசம் நிரம்புகிறது. மனந்திரும்புதல் பில்லி கிரகாம், ஓரல் ராபர்ட்ஸ் இன்னும் மற்றவர்களால் பிரசங்கிக்கப்பட்டது. தீர்க்கதரிசிகள், மற்றவர்கள், அற்புதங்களும் அடையாளங்களும் கொண்டவர்களாக இந்த தேசம் நெடுகிலும் சென்றுவிட்டனர். இருப்பினும் அது தொடர்ந்து பாவத்தில் உழன்று கொண்டிருக்கிறது. ஆகையால் தான் அவர்கள் மனந்திரும்புவதில்லை, மனந்திரும்புதல் அதைக் கொண்டு வருகிறது. 71 கவனியுங்கள். ஆகாப் எலியாவின் கடிந்து கொள்ளுதலைக் கேட்டு மனந்திரும்பவில்லை. ஆகாப் மட்டும் மனந்திரும்பி தேவனுக்கு முன்பாக மெதுவாக நடந்திருந்தால், அந்த காரியம் சம்பவித்திருக்காது. ஆனால் ஆகாபோ அங்கு வந்து நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை அபகரித்து, அவனைக் கொலை செய்வித்து, பொல்லாங்கான எல்லாவற்றையும் செய்தான். யேசபேல்... அந்த தீர்க்கதரிசி கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் நடந்து அங்கு சென்றான். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவள் அவனைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தினாள். என்ன நடந்தது? அவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறினது, நாய்கள் அவளைப் புசித்து ஆகாபின் இரத்தத்தை நக்கின. அவன் உரைத்த வார்த்தையின்படியே அப்படியே நடந்தது. அவன் கலசம் நிறைந்திருந்ததைக் கண்டான். ஆகையால்தான் அந்த சிறு மிகாயா எலியா உரைத்ததையே உரைத்தான். தேவன் சபித்ததை அவன் எப்படி ஆசிர்வதிக்க முடியும்? பாருங்கள், அவனுடைய வார்த்தை, அவனுடைய தீர்க்கதரிசனம், தேவனுடைய வார்த்தையுடன் இசைவாய் இணைந்திருந்தது. 72 யோவான் ஸ்நானன் ஏரோது ராஜாவிடம், “நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக் கொள்வது நியாயமல்ல” என்று சொன்னபோது, அவன் மனந்திரும்பவில்லை. ஆனால் அவன் என்ன செய்தான்? அவனுடைய மனைவி தீர்க்கதரிசியின் தலையைக் கேட்டாள். அவன் எவ்வளவு மோசமான செயலில் ஈடுபட்டான் என்று பாருங்கள். இன்றைக்கும் கூட அவரைப் புறக்கணித்ததன் ஞாபகார்த்தமாக, சுவிட்சர்லாந்திலுள்ள நீலநிறத் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கிறது. பாருங்கள், நிச்சயமாக, அவன் கர்த்தரால் கடிந்து கொள்ளப்பட்ட போது மனந்திரும்பவில்லை. அவனுடைய பதவியைக் குறித்து யோவான் கவலை கொள்ளாமல் (அவன் கல்லூரி தலைவர், சக்கிரவர்த்தி, யாராயிருந்தாலும் சரி) அவனிடம் எடுத்துக் கூறினபோது, தேவனுடைய அழைப்புக்கு செவிகொடுத்து அவன் மனந்திரும்பியிருக்க வேண்டும். இல்லையேல், தேவகோபாக்கினை அவன் மேல் தங்கும். தீர்க்கதரிசிகள் எத்தனை முறை... இங்கு நான் எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் நமக்கு நேரமிருக்காது, ஏனெனில் எனக்கு இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. 73 மனந்திரும்பாமல் போனால், நியாயத்தீர்ப்பு வருவது உறுதி! எசேக்கியா மனந்திரும்பினான். பாருங்கள்? நினிவே மனந்திரும்பினது. ஆகாப் மனந்திரும்பவில்லை. நெபுகாத்நேச்சார் மனந்திரும்பவில்லை. நோவாவின் காலத்தில் இருந்த ஜனங்கள் மனந்திரும்பவில்லை. ஆகையால் நியாயத்தீர்ப்பு அவர்களை வாரிக் கொண்டுபோனது. பாருங்கள். ஆனால் அவர் முதலில் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறார். ஒவ்வொருவரும் எச்சரிக்கை பெறுகின்றனர். இப்பொழுது, காலம் சமீபமாயிருப்பதைக் காணும் போது எச்சரிக்கை உள்ளதாக உணரும் ஒவ்வொருவரும், தேவ கோபாக்கினை தாக்குவதற்கு முன்பு வேகமாக மனந்திரும்புவார்களாக. இப்பொழுது, இதை நாம் பிரான்ஹாம் கூடாரத்துக்கு கொண்டு வருவோம். இவைகளை நாம் கண்டு, அது சத்தியம் என்று அறிந்திருக்கிறோம். இது முற்றிலும் உண்மை என்று நாம் அறிந்திருக்கிறோம். வார்த்தையின் கட்டளை என்னவெனில், நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவீர்களானால், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்றும், வாக்குத்தத்தமானது உங்களுக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்பதே. பாருங்கள்? 74 அண்மையில் ஒருவர், திரு. டெள, என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. தொண்ணூற்றொன்று வயது, நான் பலவீனமடைந்து வருகிறேன். நான் மரிக்க ஆயத்தமாயிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் போக ஆயத்தமாயிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார், நான், “திரு. டெள, உடல் பரிசோதனைக்காக நீங்கள் எப்பொழுதாவது மருத்துவரிடம் சென்றதுண்டா? என்று கேட்டேன். அவர், “ஆம்” என்றார், நான், “நீங்கள் அவரிடம் கூறுகிறீர்கள்... இப்பொழுது, மருத்துவர் என்ன செய்கிறார் என்றால், அவருக்கு அங்கு ஒரு புத்தகம் உள்ளது. அவர் அந்த புத்தகத்தை எடுத்து, 'இப்பொழுது, நான் முதலாவதாக இந்த மனிதனுக்கு செய்ய, வேண்டியது, அவருடைய இருதயத்தை பரிசோதிப்பதே' என்று கண்டுகொள்கிறார். எனவே அவர் பரிசோதனை குழாயை (stetho - scope) எடுத்து தன் காதில் மாட்டிக்கொண்டு இருதயத்தைப் பரிசோதிக்கிறார். அடுத்ததாக அவர் செய்வது, அவருடைய இரத்த அழுத்தம் எவ்வளவு என்பதை அவருடைய கரத்தில் அழுத்தம் உண்டாக்கி கண்டுபிடிக்கிறார். அடுத்ததாக அவர் செய்வது, அவருடைய சிறுநீரை சிறிது எடுத்து, அதன் பிறகு சிறிது இரத்தத்தை எடுத்து, இவ்விதமாக வெவ்வேறு காரியங்களைச் செய்கிறார். அவையனைத்தையும் அவர் பரிசோதித்து விட்டு அவரால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்... அவர் எக்ஸ்-ரே எடுக்கிறார். அப்பொழுதும் அவரால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 'அவர் திரு. டெள், உங்கள் உடல் நன்றாக இருக்கிறது' என்கிறார்” என்றேன். அவர் எதை ஆதாரமாகக் கொண்டு இவைகளைச் செய்கிறார்? அவருடைய மருத்துவ புத்தகத்தில் உள்ள நிபந்தனைகளையே. அதை எழுதின் தலைமை விஞ்ஞானி, உடலில் ஏதாகிலும் கோளாறு இருந்தால், அது இங்கே காண்பிக்கும், இதை இங்கு செய்யும், அதை அங்கு செய்யும் என்று எழுதி வைத்திருக்கிறார். எனவே அவருக்குத் தெரிந்த மட்டில், நீங்கள் உடலைப் பொறுத்தவரையில் நன்றாயிருக்கிறீர்கள். 75 இப்பொழுது, நான் ஆத்தும பரிசோதனை செய்யப் போகிறேன். பாருங்கள்? ஆத்தும பரிசோதனைக்கென்று, தேவன் ஒரே ஒரு கருவியையே வைத்திருக்கிறார். அது உண்மை. அதுதான் அவருடைய வார்த்தை. இயேசு யோவான். 5:24-ல், “என் வசனத்தைக் கேட்டு”, கேட்டு என்றால் அது உரைக்கப்படும் போது அதன் சத்தத்தைக் கேட்பது என்று அர்த்தமல்ல. கேட்டு என்றால் ஏற்றுக் கொள்வது என்று பொருள். “என் வசனத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ” ஆமென். “என் வசனத்தைக் கேட்கிறவன்”, எவனோ “நீங்கள் அமைதியாக நின்றுகொண்டிருந்து, அதை மூடத்தனம் என்று அழைக்காதீர்கள். ”இந்த காரியங்கள் ஒன்றுமேயில்லை, அதை நான் விசுவாசிக்கமாட்டேன்“ என்று சொல்லாதீர்கள். ”என் வசனத்தைக் கேட்டு அது இயேசுவின் வார்த்தை. அவரே வார்த்தையாயிருக்கிறார். பார்த்தீர்களா? நீங்கள் என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசித்தால், அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். அவன் நியாயத்தீர்ப்புக்குள் பிரவேசிப்பதில்லை, அவன் ஏற்கனவே அதை கடந்துவிட்டான்“ ஆமென். நான் சகோ. டெளவிடம், ”இப்பொழுது உங்கள் இருதயத் துடிப்பு எவ்விதம் உள்ளது?“ என்று கேட்டேன். அவர், “அதை நான் விசுவாசிக்கிறேன். அதைக் கேட்டேன், அதைப் பெற்றுக் கொண்டேன்” என்றார். நான், “அப்படியானால், தலைமை சிறப்பு மருத்துவர், தலைமை இயக்குனர், நித்திய ஜீவனின் தலைமை மருத்துவரின்படி, நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டுவிட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் ஆக்கினைத் தீர்ப்பை அடைவதில்லை” என்றேன். 76 அவர், “நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்த போது, உங்களுக்குப் பின்னால் நான் நடந்து வந்தேன். நீங்கள் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்கள். நான்... நான் ஒரு காலத்தில் இருந்ததைப் போல இப்பொழுது இல்லை. ஏதோ ஒன்று எனக்குச் சம்பவித்தது. அதைக் குறித்து நான் அக்கறை கொள்ளாமல் வேறு வழியில் நடந்து கொண்டிருந்தேன். ஆனால் நான் திரும்பி இந்த வழியில் நடக்கத் தொடங்கிவிட்டேன். அவரிடம் நெருங்க வேண்டுமென்று என் இருதயம் இரவும் பகலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். அவை ஒவ்வொன்றுக்கும் நான் ”ஆமென்“ என்று சொல்கிறேன். அது எவ்வளவாக என்னை அறுத்தாலும் எனக்குக் கவலையில்லை. அது அளக்கும் அளவிற்கு நான் சரியாக இருக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த மட்டில், ”நான் அவ்விதமே இருந்து வருகிறேன்“ என்றார். நான், “உங்கள் இருதயம் மிகவும் நன்றாக துடித்துக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் ஆவிக்குரிய பிரகாரம் நன்றாக இருக்கிறீர்கள்” என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் போது அதில் நான் செல்லமுடியுமா என்று வியக்கிறேன்” என்றார். நான், “யார் செல்வார்கள், யார் செல்லமாட்டார்கள் என்று என்னால் சொல்லமுடியாது” என்றேன். அவர், “எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் போது நான் உயிரோடிருக்க விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளப்படுதலைக் காண வேண்டுமென்று நான் மிகவும் ஆவலாயிருக்கிறேன்” என்றார். 77 நான், “சரி, விஞ்ஞானப் புத்தகம் - ஆத்தும விஞ்ஞானம் - இங்கு என்ன உரைக்கிறதென்று பார்க்கலாம். நல்லது அது 2தெசலோனிக்கேயர்: 5-ம் அதிகாரத்தில் (1தெசலோனிக்கேயர்: 4-ம் அதிகாரம் - தமிழாக்கியோன்) ”கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை (அதாவது அவர்களை நாம் தடை செய்வதில்லை). ஏனெனில் தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்கள் அல்லது இளைப்பாறிக் கொண்டிருக்கிறவர்கள், முதலாவது எழுந்திருந்து அழியாமையைத் தரித்துக் கொள்வார்கள். அப்பொழுது அந்நாளில் உயிரோடிருக்கும் நாமும் அதாவது அவர்கள் உயிரோடு எழுந்திருக்கும் நாளில் இருப்பவர்கள் ஒரு நொடிப் பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி, அவர்களைச் சந்தித்து, கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்க, அவர்களோடே கூட எடுத்துக் கொள்ளப்படுவோம்“ என்று உரைக்கிறது. எனவே நீங்கள்; நித்திரையடைந்திருந்தாலும் அடையாமற் போனாலும்; நீங்கள் எந்த இடத்திலும் அடக்கம் பண்ணப்பட்டிருந்தாலும், அடக்கமே பண்ணப்படாமல் போனாலும், நீங்கள் எப்படியும் எடுத்துக் கொள்ளப்படுதலில் வருவீர்கள். எதுவும் உங்களைத் தடுக்க முடியாது. நீங்கள் அங்கிருப்பீர்கள். சகோ. டெள, என்னுடைய பேரப் பிள்ளைகள், அவர்களுடைய பேரப் பிள்ளைகள், அவர்களுடைய பேரப் பிள்ளைகள், அவர்களுடைய பேரப் பிள்ளைகள் காலம் வரைக்கும் அவர் வராமல் போனாலும், அவர் வரும்போது நீங்கள் அப்பொழுதும் அங்கிருப்பீர்கள். அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் போவார்கள் என்றால், அவர்கள் மருரூபமாவதற்கு முன்பே நீங்கள் அங்கிருப்பீர்கள்” என்றேன். அது உண்மை. ஆமென்! 78 வரப்போகும் கோபாக்கினை ஒன்றிருப்பது போலவே, வரப்போகும் ஆசிர்வாதம் ஒன்றுண்டு. ஓ, இவையிரண்டில் ஒன்றை நாம் இன்றிரவு எதிர்நோக்கினவர்களாய் இருக்கவேண்டும். அழிவுக்கென கோபாக்கினை உங்கள் மேல் விழுவதை நீங்கள் எதிர்நோக்கியிருக்க வேண்டும், அல்லது கர்த்தராகிய இயேசுவின் இரகசிய வருகையை நீங்கள் எதிர்நோக்கியிருக்க வேண்டும். ஒன்றை வாக்களித்த அதே தேவன் தான். அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த மகிழ்ச்சிகரமான ஆயிர வருட அரசாட்சியின் நாள் வர நான் விழிப்புடன் காத்திருக்கிறேன் அப்பொழுது நமது ஆசிர்வதிக்கப்பட்ட கர்த்தர் வந்து காத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்து செல்வார் ஓ, இனிமையான அந்த விடுதலையின் நாளுக்காக என் இருதயம் ஏங்கித் தவிக்கிறது அப்பொழுது இயேசு மறுபடியும் பூமிக்கு வருவார். அப்பொழுது இந்த அந்தகார உலகின் பாவமும், துயரமும், வேதனையும் மரணமும் ஒய்ந்திருக்கும் இயேசுவுடன் அரசாளப் போகும் அந்த மகிமையான ஆயிர வருட சமாதான ஆட்சியில் (ஓ, என்னே! “இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். பாருங்கள்) 79 தேவன் ஒன்றை உரைத்திருந்தால், அது நிறைவேறியே ஆகும். “அவர்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை. அவர்கள் தங்கள் சொந்த திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” ஆமென்! ஆமென்! “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதில்லை” அல்லேலூயா! (ஏசா: 65:21, 22, 25). இந்த அழிவுள்ள சரீரம் அழியாமையைத் தரித்துக் கொள்ளும் பொழுது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும். அப்பொழுது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசித்து, அவருடைய மகிமையான சரீரத்துக்கு ஒப்பான ஒரு சரீரத்தைப் பெற்றிருப்போம். ஓ, என்னே, வரப்போகும் அந்த நேரம்! 80 அதே தேவனும், ஊற்றப்படவிருக்கும் கோபாக்கினையைக் குறித்து தேவனுடைய வார்த்தையை முன்னுரைத்த அதே தீர்க்கதரிசிகளுமே வரவிருக்கும் ஆசிர்வாதங்களைக் குறித்தும் முன்னுரைத்துள்ளனர். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது! தேவன் ஒரு தேசத்தை எச்சரிக்காமல், அதற்கு அழிவைத் தருவதில்லை. அவர் மனிதனை எச்சரிக்காமல் அவனுக்கு அழிவைத் தருவதில்லை. அவர் அழிவைத் தருவாரெனில், நமக்கு அப்பொழுது ஏதோ ஒன்று நேர்ந்துள்ளது. இக்கடைசி நாட்களின் அடையாளங்களின் உறுதிப்படுதல் நம்மோடு உள்ளது. அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் நமது மத்தியில் அசைவாடி, அவருடைய பிரசன்னத்தினால் சபையை நிரப்பி, அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நாட்களில் ஒன்றில் சபையானது தேவனுடைய வல்லமையினால் ஆகாயத்திற்கு ஏறிச் செல்வதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி பொறுமையோடே பறந்து செல்லக் கடவோம் என்னும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 81 சபையே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! ஆம், ஐயா. அவருடைய பிரசனத்தை நீங்கள் உணருவீர்களானால், அவரிடம் செல்லுங்கள். உங்கள் இருதயத்தில் ஏதாகிலும் தவறு இருக்குமானால், அதை சரியாக்கிக் கொள்ளுங்கள். நமக்கு இன்னும் அதிக நேரம் கிடையாது. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது. அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஓ, என்னே! அங்கு மிகவும் அருமையாய் இருக்குமல்லவா? இயேசுவுக்காக போரில் ஈடுபட்ட வீரர்கள் அந்த பரதீசில் நடந்து செல்வது கண்கொள்ளாக் கட்சியாயிருக்குமல்லவா? ஓ, என்னே! அந்த நேரத்துக்காக நான் காத்திருக்கிறேன். 82 என் சகோதரன் இவ்வாறு கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் போர்க்களத்திலிருந்து கடல் மார்க்கமாய் திரும்பி வரும் போது, யுத்தத்தில் கைதேர்ந்த இராணுவ வீரர்கள் விடுதலை சிலையை (Statue of Liberty) காணும் போது, ஊனமுற்றவர்களைக் தூக்கி அந்த சிலையைக் காண்பிப்பார்களாம். அந்த சிலை மிக உயரமாயிருப்பதால், நீங்கள் கப்பலில் வரும்போது அதை தான் முதலில் காண்பீர்கள். நீட்டப்பட்ட கரத்துடன் அந்த சிலை நின்று கொண்டிருப்பதை அவர்கள் காணும் போது, தேம்பி அழுவார்களாம். அந்த மகத்தான இராணுவ வீரர்கள் அங்கு நின்று கொண்டு, கப்பலின் மேல் தளத்தின் மேல் சாய்ந்து கதறி அழுவார்களாம். அது என்ன? விடுதலையின் சின்னம். அவர்கள் நேசித்த அனைத்தும் அந்த சின்னத்தின் பின்னால் இருந்தது. ஓ, அப்படியானால், அந்த காலையில் சீயோனின் கப்பல் ஊதும் சத்தத்தை நான் கேட்டு, கொடிகள் அங்கு ஆட்டப்படுவதை நான் காணும் போது எப்படியிருக்கும்! யுத்தம் முடிந்து வெற்றி பெற்றவுடன்! அல்லேலூயா! நாம் வீடு திரும்புவோம். அங்கு மரணம், பாவம், நரகம் அனைத்தும் ஜெயங்கொள்ளப்பட்டுவிட்டது. அங்கு இனி பாவம் இல்லை, இனி மரணம் இல்லை, இனி துக்கம் இல்லை, அந்த ஊதல் ஊதும் சத்தத்தை நான் கேட்கிறேன்! ஓ, நாம் நகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆம், ஐயா. கரையில் மோதிச் சிதறும் அலைகள் நெருங்குகின்றன. அந்த கப்பல் அது சேர வேண்டிய இடத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. தேவனே, அந்த நேரத்துக்காக வாழ எங்களுக்கு உதவி புரிவீராக! 83 கர்த்தராகிய இயேசுவே, நீர் மரித்து நேராக்கின உம்முடைய மகத்தான சுவிசேஷ ஒளியில் நடக்க, எங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றோடும் நாங்கள் மிகவும் சிறப்பாக முயற்சி செய்கிறோம். நாங்கள் இந்நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த பொல்லாத அந்தகார நாட்களில், உமது அடையாளங்கள் வெளிப்படுவதை நாங்கள் காண்பதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, தேவனே, அது சுவரில் எழுதப்பட்ட கையெழுத்தாயிருப்பதால், அதை நாங்கள் கண்டு, மீட்பு அருகாமையிலுள்ளது என்பதை நாங்கள் அறிந்து கொள்ளச் செய்ததற்காக, கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் தேசம் நெடுக சென்று, பிரசங்கித்து, உமது மகத்தான கிரியையின் அடையாளங்களை கண்டு, உம்மை நாள்தோறும் ஒவ்வொரு ஆண்டும் அவைகள் காண்பிப்பதை நாங்கள் காண்கிறோம். அவருடைய மகத்தான, இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் பூமியில் காண்பிக்கப்படாமல், ஒரு ஆண்டும் கூட கடந்து சென்றதில்லை. அதை நாங்கள் கண்டு, மகத்தான தேவனுடைய சேனை அணிவகுத்து முன் செல்கிறது என்பதை அறிந்தவர்களாயிருக்கிறோம். ஓ, அவர்களின் எண்ணிக்கை அதிகமல்ல, ஆனால் நித்திய ஜீவனைப் பெற்றுள்ள அந்த கூட்டம் எவ்வளவு வல்லமை வாய்ந்தது! “அவர்கள் சேனைகளின் வழியாக ஓடுவார்கள், மதிலைத் தாண்டுவார்கள். ஆம், மரணம் என்னும் சேனை அவர்களுக்கு சேதம் விளைவிக்க முடியாது. அவர்கள் அதன் வழியாக ஓடி, இயற்கைக்கும் இயற்கைக்கு மேம்பட்டதற்கும் இடையே உள்ள மதிலைத் தாண்டி, அந்த மகத்தான நித்தியத்தில் தேவனுடைய கரங்களை அடைவார்கள். கர்த்தராகிய தேவனே, அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நேரம் நெருங்கி, அது சமீபமாயுள்ளது என்று அறிகிறோம். 84 தேவனே, உம்மை அறிந்திராத, உம்மிடம் சமாதானம் பெறாத யாராகிலும் இன்றிரவு இங்கு இருப்பார்களானால்... நாங்கள் இன்றிரவு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, ஒரு வேளை ஒரு சிறு சத்தம் அவர்களுடைய இருதயத்தில் பேசி, “இங்கு இன்னும் நீண்ட காலம் நான் இருக்க முடியாது என்னும் எச்சரிக்கையை உணருகிறேன்” என்று எண்ணினால், ஓ, தேவனே, அவர்கள் தங்கள் வீட்டை இப்பொழுதே ஒழுங்குபடுத்துவார்களாக. எல்லாமே ஒழுங்குபடுத்தப்படட்டும். அவர்களுடைய குளிர்ந்த நிலை... அவர்கள் ஒருக்கால் கிறிஸ்தவர்களாயிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு... அவர்கள் நீண்ட காலம் இதன் அடியில் வாழ்ந்து, அநேக காரியங்களைக் கண்டதன் நிமித்தம், அதன் மதிப்பை அவர்கள் இழந்துவிட்டிருக்கக் கூடும். அது... அதை ஆழமாகவும் உண்மையாகவும் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். ஓ, தேவனே, இந்த மகத்தான காரியங்கள், சபை விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கு எச்சரிக்கையாய் விளங்குகின்றன என்பதை நாங்கள் அறிந்தவர்களாய், இன்றிரவு நாங்கள் எங்களை சோதித்துப் பார்த்துக் கொள்ள அருள் செய்வீராக. நாங்கள் பாவத்தினாலும், அசுத்தத்தினாலும், சோம்பேறித்தனத்தினாலும், பாரப்பட்டிருந்தால், நாங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல முடியாது. அதை நாங்கள் அறிந்திருக்கிறோம், கர்த்தாவே. எனவே, எங்கள் இருதயத்தின் ஆழத்தில் பரிசுத்த ஆவியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஓ, தேவனே, உம்முடைய ஆசிர்வாதத்தினால் எங்கள் ஆத்துமாக்களை பற்றி எரியச் செய்வீராக. நாங்கள் புரிந்து கொள்ள உதவி செய்யும். 85 இப்பொழுது, இங்குள்ள ஜனங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பீராக. எங்களுடைய விலையேறப்பெற்ற மேய்ப்பரையும் அவருடைய மனைவியையும் ஆசிர்வதியும். டீகன்மார்கள், தர்ம கர்த்தாக்கள், சபையோர் அனைவரையும் ஆசிர்வதிப்பீராக. எங்கள் பாவங்களை மன்னியும், எங்கள் வியாதிகளை குணமாக்கும், ஆண்டவரே எங்கள் இருதயங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்யும். எச்சரிக்கையின் செய்தியுடன் நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, பாவத்தில் உள்ள மக்களை நாங்கள் சந்திக்க நேர்ந்தால், “நண்பனே, இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய உனக்கு வெட்கமில்லையா? என்றாவது ஒரு நாளில் நீ தேவனைச் சந்திக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறாய் அல்லவா? என்று அவர்களிடம் கூறுவோமாக. கர்த்தாவே, அதை அருளுவீராக”, இவர்களை இப்பொழுது உம்மிடம் சமர்ப்பிக்கிறேன், செய்தியும் மற்ற அனைத்தும் ஒருமித்து உமது மகிமைக்கென்று கிரியை செய்ய ஒப்புக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 86 நாம் அவரை நேசிக்கிறோம் அல்லவா? நாம் யாரென்று சிந்தித்துப் பாருங்கள். நண்பனே, நாம் பாதையில் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்பதைப் பாருங்கள். நீங்கள் பாதையில் திரும்பிப் பார்த்து லூத்தர், வெஸ்லி, ஆகியோரின் காலங்களை பாருங்கள். இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் பாருங்கள், கூர்நுனிக் கோபுரத்தின் உச்சியில். இங்கு தேவன், ஏழு முத்திரைகளின் மூலம் வேதாகமம் முற்றிலும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை நிரூபித்துவிட்டார். கர்த்தருடைய வருகையைக் குறித்தும் சபையின் எடுத்து கொள்ளப்படுதலைக் குறித்தும் கடைசியாக உள்ள ஏழு இரகசியங்களுக்காக மாத்திரம் இப்பொழுது காத்திருக்கிறோம். சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் காலைக்கு முன்பு நிகழக்கூடும். ஓ, என்னே! நான் அவரைநேசிக்கிறேன் (இப்பொழுது உத்தமமாக) நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 87 இப்பொழுது அமைதியாக நாம்... இங்குள்ள நாம் ஒவ்வொருவரும் இங்கிருந்து இவ்வுலகைவிட்டுப் போக வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை உணருகிறீர்களா? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் ஏதேன் தோட்டத்திலிருந்த அந்த மரணமாகிய மரத்திலிருந்து பிறந்ததனால், நாம் மரிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் நமது தாயின் கர்ப்பத்தின் கனிகள், நாம் மரிக்கவேண்டும், இந்த வாழ்க்கையை விட்டு நாம் பிரிந்து செல்ல வேண்டும். இளைஞராயினும் முதியோராயினும், அதனால் எந்த வித்தியாசமுமில்லை. இங்குள்ள மிகவும் வயோதிப மனிதனாவது ஸ்திரீயாவது இன்றிரவு உயிர் வாழ்ந்தால், அவர்கள் பத்து, பதினைந்து வயதுள்ள அநேக பிள்ளைகளையும் மிஞ்சி உயிர் வாழ்ந்திருக்க (outlive) வகையுண்டு. உலகம் பூராவிலும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் காலை விடியும் முன்பு மரித்துப் போவார்கள். எனவே முக்கியமான விஷயம் என்னவெனில், இப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 88 இது ஒருக்கால் உங்கள் கடைசி தருணமாயிருக்கலாம். வாலிபரானாலும் வயோதிபரானாலும், உங்களால் சபைக்கு வர முடிகிறது. எதையும் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். நீங்கள் ஆழமான உத்தமமுள்ளவர்களாயிருங்கள். பாவமனைத்தையும் மற்றவைகளையும் புறம்பே தள்ளிவிடுங்கள். தேவனுடைய முகத்துக்கு நேராக நோக்கி, “ஆண்டவரே, உம்மை நான் பிரீதிபடுத்துகிறேனா?” என்னும் கேள்வியைக் கேளுங்கள். “கர்த்தராகிய இயேசுவே, நான் வேறென்ன செய்ய முடியும்? இந்த வாழ்க்கை முடிவுற்ற பிறகு, உம்மைச் சேவிக்க எனக்கு வேறொரு தருணம் கிடைக்காது. கர்த்தராகிய தேவனே, எனக்கு கிடைக்கப் பெற்றுள்ள சமயம் இது ஒன்று மாத்திரமே. நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் எனக்குத் தெரியப்படுத்தும். நான் சென்று இதை செய்ய வேண்டும், அதை செய்யவேண்டும் என்றால், நான் சந்தோஷமாக செய்வேன்” என்று சொல்லுங்கள். அதை நாம் உத்தமமாய் சிந்தித்துப் பார்க்கிறோமா? சிறுவர் அதை சிந்தித்துப் பார்க்கின்றனரா? நடுத்தர வயதுள்ளோர் அதை சிந்தித்துப் பார்க்கின்றனரா? வயோதிபர் அதை சிந்தித்துப் பார்க்கின்றனரா? இளைஞர் அதை சிந்தித்துப் பார்க்கின்றனரா?நாமெல்லாரும் போக வேண்டும். நாளை காலை முன்பு நாம் எல்லோரும் போய்விட்டிருக்க மாட்டோம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நமக்குத் தெரியாது. “அது என்னை கவலையில் ஆழ்த்துகிறது” என்று நீங்கள் கூறலாம். அது அவ்விதம் செய்யக் கூடாது. வெளிப்படையாய் கூறினால், இந்த பழைய பூச்சி அரிக்கும் வீட்டை விட்டுச் செல்வதற்கு நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். 89 மற்றொரு உலகம் உண்டு. அதை அடைய நீங்கள் இங்கிருந்து வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை. அது உங்களோடு உள்ளது. அது உங்களைச் சுற்றிலும் உள்ளது. நீங்கள் சும்மா... நீங்கள்... தேவன் உங்களுக்கு ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறார். அது இந்த உலகில் இவ்வளவு மட்டும் தொடர்பு கொள்வதற்காக, ஆனால் வேறொரு உலகம் உண்டு, அதனுடன் தொடர்பு கொள்ள உங்களுக்குப் புலன்கள் கிடையாது. உங்களிடம் புலன்கள் இல்லாததனால், உங்களால் தொடர்பு கொள்ள முடியாது. உதாரணமாக, நான் ஞாயிறு இரவு கூறியது போன்று (ஒருவேளை நீங்கள் புரிந்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள்) என்ன... நமக்கு ஐம்புலன்கள் உள்ளன; பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல். உங்களுக்கு பார்வை இல்லாமல் ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் மற்ற புலன்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். வேறு யாருக்காகிலும் பார்வை இருந்தால் அவர் “வேறொரு உலகம் உண்டு, சூரியன்?” என்று கூறுகிறார். உங்களுக்கு உணருதல் என்னும் புலன் இருந்தால் நீங்கள் அதன் மேல் மோதும் போது, அது என்னவென்று அப்புலன் கூறுகிறது. உங்களுக்கு பார்வை என்னும் புலன் இல்லாததனால், பார்வையைக் கொண்டு வேறொரு உலகம் உண்டு என்று கண்டு கூறுபவரை நீங்கள் பைத்தியக்காரன் என்று நினைப்பீர்கள். உங்களுக்குத் தெரிந்த யாருக்குமே பார்வை இல்லை என்று வைத்துக் கொள்வோம். வேறொரு உலகம் உண்டு என்று மக்கள் கூறக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் அதை நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்கள். ஆனால் அந்தப் புலனின் மூலமாக அது உண்மையென்று நாமறிவோம். அது உண்மையான ஓரிடம். பாருங்கள்? அந்த இடம்... நீங்கள் காணக்கூடிய இடமாயுள்ளது. உங்கள் புலன், இது இருக்கிறது என்பதை அறிவிக்கிறது. 90 நீங்கள் மரிக்கும் போது, நீங்கள் செய்யும் ஒரே காரியம் என்னவெனில், உங்களுக்கிருக்கும் ஐம்புலன்களை நீங்கள் மாற்றிக் கொள்கிறீர்கள் (மகிமை! வ்யூ) நீங்கள் வேறு புலனைப் பெறுகிறீர்கள். நீங்கள் மற்ற வாழ்க்கையில், இதை காட்டிலும் உயர்ந்த புலனை, ஆயிரக்கணக்கான மடங்கு உயர்ந்த புலனைப் பெறுகிறீர்கள். அங்கு மரணம் கிடையாது, துயரம் கிடையாது. இப்பொழுது உங்களுக்கு ஒன்றுமே தெரிந்திராத காரியங்களை, நீங்கள் கடந்து அங்கு செல்லும் போது தெளிவாகக் காண்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதை புரிந்து கொள்ள இயலவில்லை, நீங்கள் அதன் மேல் மோதிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த புலன் இல்லை. நீங்கள், “இன்றிரவு எனக்கு ஒரு விசித்திரமான உணர்வு உள்ளது. ஏதோ ஒன்று இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. எனக்கு அழவேண்டும், சத்தமிட வேண்டும்” என்கிறீர்கள். அது கர்த்தருடைய தூதன். பாருங்கள்? 91 பார்வை இல்லாத ஒருவர், “எப்பொழுதாகிலும் ஒரு முறை, அது உண்மை என்று உணருகிறேன், எனக்கு வெப்பம் என்னும் உணர்வு உண்டாகிறது” என்கிறார். நீங்கள், “அது சூரிய வெளிச்சம்” என்கிறீர்கள். அவர், “சூரிய வெளிச்சம் என்றால் என்ன? அதை நான் கண்டதில்லையே! அப்படி ஒன்று இருப்பதாக...” என்கிறார். பாருங்கள், அவர் அதைக் கண்டதேயில்லை, அது என்னவென்று அவருக்குத் தெரியாது. பாருங்கள், அங்குள்ள யாராவது அதைக் காணக்கூடிய யாராவது அவரிடம் கூற வேண்டும். ஓ, என்னே! பாருங்கள்? நாம் மாறிவிடுகிறோம், நாம் மாறிவிடுகிறோம். எனவே மரணத்தை குறித்து பயப்படாதீர்கள். அது பறவைகளை பயமுறுத்தும் சோளக்கொல்லை பொம்மையே (scarecrow) அன்றி வேறல்ல. இயேசு அதை ஜெயித்தார். பவுலும் கூட வாழ்க்கை பாதையின் இறுதிக்கு வந்த போது, “மரணமே, உன் கூர் எங்கே? உன் பயம் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? நீ என்னைப் பிடித்துவிட்டதாகக் கூறுகிறாய். உனக்கு நான் எருசலேமிலுள்ள ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அங்கே காலியான கல்லறை ஒன்றுள்ளது. அவர் மரணமாகிய உன்னையும் பாதாளத்தையும் ஜெயங்கொண்டிருக்கிறார். நான் அவரில் இருக்கிறேன். ஆகவே உன்னால் என்னைப் பிடித்து வைக்க முடியாது. நான் மறுபடியும் எழுந்திருப்பேன்” என்றான். ஓ, என்னே! அவன், “கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கு அதைத் தந்தருளுவார்” என்றான் (2தீமோ: 4:8). 92 நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், அவர் வருகையைக் காண நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் அவருக்காக காத்திருக்கிறீர்கள். அது நீண்ட வரலாறு, அது நீண்ட காலமாககாத்திருத்தல். அது காதல் விவகாரம். அவரைக் காணும் வரைக்கும் உங்களால் காத்திருக்க முடியவில்லை. ஓ, என்னே! அவ்விதமாகத்தான் அது உள்ளது. ஓ, அந்த நேரத்துக்காக நாம் காத்திருக்கிறோம். நண்பனே, உன் இருதயம் இன்றிரவு அந்நிலையில் இல்லாமல் இருந்தால், ஜாக்கிரதையாயிரு. பார்? ஜாக்கிரதையாயிரு. சத்துரு உன்னை வஞ்சிக்க இடங்கொடாதே. இங்குள்ள பரிசுத்த ஆவி, உங்களை உண்டாக்கினவரிடத்தில், உங்கள் எஜமானிடத்தில் நீங்கள் பறந்து செல்ல வேண்டுமெனும் ஆவலை உங்களுக்குத் தரும் போது, அது யாராலும் விவரிக்க முடியாத ஒரு காதல் விவகாரம். அது உண்மை. அது தத்ரூப்மான ஒன்று. அது தத்ரூபமான ஒன்று. எனவே, “நீங்கள் அதற்காக ஆயத்தமாயில்லை” என்னும் எச்சரிக்கை எழுந்தால், ஒருக்கால் தேவன் உங்களை ஏதோ ஒன்றுக்காக ஆயத்தப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் ஆயத்தமில்லை... 93 நீங்கள், “நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றால், ஒருவேளை கர்த்தர் என்னைக் கொண்டு செல்வார்” என்று நினைக்கலாம். இல்லை, அது மட்டும் போதாது, அப்பொழுதுதான் நீங்கள் வாழ்வதற்கு ஆயத்தமாகின்றீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப்பெறும் வரைக்கும், நீங்கள் வாழ்வதற்கு ஆயத்தமாயில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் போது, வாழ்வதற்கு தகுதி பெறுகிறீர்கள். அதற்கு முன்பு நீங்கள் வாழ்வதற்கு தகுதி பெற்றிருக்கவில்லை, பாருங்கள், ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட பிறகு, நீங்கள் வாழ்வதற்கு தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்கள். பாருங்கள்? அது உங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? ஜனங்கள், “மரிப்பதற்கு நான் ஆயத்தப்பட வேண்டும்” என்கின்றனர். ஓ, என்னே, நான் வாழ்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்! ஆமென். காரியம் என்னவெனில், நீங்கள் வாழ்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தால், கிறிஸ்துவில் வாழுங்கள்! பாவம்,மரணம், பாதாளம் என்பவைகளின் பேரில் வெற்றியுள்ள வாழ்க்கை. எனக்கு ஏற்கனவே வெற்றி உள்ளது. அவரே எனது வெற்றியாயிருக்கிறார். நான் அவருடைய அத்தாட்சி. அவருடைய வெற்றிக்கு நான் ஒரு அத்தாட்சி. ஆமென்! அதுதான். 94 “அதை நீங்கள் பெற்றுள்ளதாக எங்கனம் அறிவீர்கள்?” அதை நான் பெற்றிருக்கிறேன். ஆமென். அவருடைய கிருபையினால் அவர் எனக்கு அதை தந்தார். அதை நான் உணருகிறேன். அதை நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் அது கிரியை செய்வதை நான் காண்கிறேன். அது என்னை மாற்றினது. இங்குள்ள இந்த வேதாகமத்தின்படி, நான் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறேன், நான் ஆக்கினைத் தீர்ப்பை அடைவதில்லை. நான் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர் எனக்காக நியாயத்தீர்ப்பை தம் மேல் ஏற்றுக் கொண்டார். அவர் எனக்காக கிரயத்தை செலுத்தியிருந்தால், என்னை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வர பிரயாசப்படாதிருங்கள். அவர் எனக்காக அதை தம்மேல் ஏற்றுக் கொண் டார். அதை நான் அங்கீகரித்துவிட்டேன். ஆம், ஐயா. எனவே, இனி நியாயத்தீர்ப்பு இல்லை, இனி மரணமில்லை. ஓ, என்றாவது ஒரு நாள், நான் சபையையும் ஜனங்களையும் விட்டுச் செல்ல வேண்டும்... இயேசு வரத் தாமதிப்பாரானால் அப்படி நடக்குமானால், நான் மரிக்கவில்லை, நான் மரிக்க முடியாது, எனக்கு நித்திய ஜீவன் உள்ளது. நித்திய ஜீவனைக் கொண்டிருந்தால் நீங்கள் எப்படி மரிக்க முடியும்? எப்பொழுதும் தேவனுடைய சமூகத்தில் சதாகாலமும் அவரோடே கூட இருப்போம். ஆமென்! அது என் இருதயத்தை சிலிர்க்கச் செய்கிறது, என்னே, நான் மறுபடியும் பிரசங்கிக்கத் தொடங்க என்னை ஏவுகிறது. பாருங்கள்? அது உண்மை. ஓ, அவர் அற்புதமானவர் அற்புதன் அல்லவோ, அற்புதன் அல்லவோ அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு? கண்டோம் கேள்விப்பட்டோம் வேதத்தில் வாசிக்கின்றோம் அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு? அந்த சாட்சி எனக்குப் பிடிக்கும்: கண்டோம் கேள்விப்பட்டோம் வேதத்தில் வாசிக்கின்றோம் அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு? 95 ஓ, அவரை நான் நேசிக்கிறேன், அவரே என் சமாதானம், என் ஜீவன், என் நம்பிக்கை, என் ராஜா, என் தேவன், என் இரட்சகர், (என்னே, ஓ, என்னே!), என் தகப்பன், என் தாய், என் சகோதரி, என் சகோதரன், என் நண்பர், எனக்கு எல்லாம்! பாருங்கள்? நாங்கள் அவ்விதமான ஒரு சிறு பாடலைப் பாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அத்தகைய சிறு பெந்தெகொஸ்தே பாடல்களை... அவர்கள் ஒலிப்பதிவு கருவியை அணைத்துவிட்டார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் வழக்கமாக பாடும் அந்தப் பாடல்: அவரே என் தந்தை, என் தாய், என் சகோதரி, என் சகோதரன் அவரே எனக்கு எல்லாம் அவரே எல்லாம், அவரே எனக்கு எல்லாம் அவரே எல்லாம் அவரே எனக்கு எல்லாம் ஏனெனில் அவரே என் தந்தை, என் தாய், என் சகோதரி, என் சகோதரன் அவரே எனக்கு எல்லாம். அந்த பாடலை நாம் பாடுவது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? யாருக்காவது ஞாபகமுள்ளதா? என்னே, அநேக ஆண்டுகளுக்கு முன்பு! அதன்பிறகு நாம் இவ்விதம் கூறுவது வழக்கம். அது இரத்தம் என்று அறிவேன், அது இரத்தம் என்று அறிவேன் அது எனக்காக சிந்தப்பட்ட இரத்தம் என்று அறிவேன் ஒரு நாள் நான் காணமற் போனேன். அவர் சிலுவையில் மரித்தார் அது எனக்காக சிந்தப்பட்ட இரத்தம் என்று அறிவேன். அந்த பழைய பாடல் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நாம் பார்ப்போம், நாம் வழக்கமாக பாடும் அந்த மற்றப் பாடல் எது? நாம் பார்ப்போம். ஓ, நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா? நான் அப்புறம் போயிருந்த போது, நான் அப்புறம் போயிருந்தபோது, ஓ, நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா? நான் அப்புறம் ஜெபம் பண்ணப் போயிருந்த போது? நான் ஜெயங்கொண்டிருக்கிறேன், நான் ஜெயங்கொண்டிருக்கிறேன், நான் ஜெயங்கொண்டிருக்கிறேன், நான் ஜெயங்கொண்டிருக்கிறேன் ஏனெனில் இயேசு என்னை நேசிக்கிறார், அவரே என் இரட்சகர் அவர் புன்னகை செய்கிறார், என்னை நேசிக்கவும் செய்கிறார். 96 சகோ. ஸ்மித் என்னும் கறுப்பு நிற சகோதரன் இந்த முனையில் முன்பு வசித்து வந்தார். ஓ, அங்கிருந்த கறுப்பு நிறத்தவர் பாடுவதைக் கேட்டு, நான் உட்கார்ந்து கொண்டு, கூச்சலிட்டு, அழுது, மற்றெல்லாவற்றையும் செய்து, என் காரைக் குலுக்கி, அதைச் சுற்றிலும் குதித்து குதித்து ஓடியிருக்கிறேன். அவர்கள் எல்லாரும் கை கொட்டி பாடுவார்கள் (சகோ. பிரான்ஹாம் பாடும்போது கை கொட்டுகிறார் - ஆசி), ஓ, நீங்கள் விழித்திருக்க..... (கறுப்பு நிறத்தவர் இடும் தாளம், உங்களுக்குத் தெரியுமா, அவர்களைப் போல் யாருமே பாட முடியாது. அதை நீங்கள் மறந்துவிடுவது நலம். பாருங்கள்?) ......ஒரு மணி நேரம், நான் அப்புறம் போயிருந்த போது... ஓ, என்னே! அங்கு நான் உட்கார்ந்து கொண்டு, “ஓ, தேவனே!” என்பேன். அந்த இளைஞன், ஏறக்குறைய இருபது வயதுள்ளவன், நான் காரைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்து, கூச்சலிட்டு இவ்விதமாக தேவனைத் துதிப்பது வழக்கம். ஓ, என்னே ஒரு தருணம்! அது தொடக்கத்தில், தேவன் ஜனங்களின் மத்தியில் அசைவாடிக் கொண்டிருந்த போது. இப்பொழுதோ நாம் பலமுள்ள சபைக்குள் வந்துவிட்டோம். நிறைய அங்கத்தினர்கள் கிடையாது. ஆனால் ஆவியில் வல்லமையுடையது. ஆமென். எவ்வளவு அற்புதமானது! 97 ஒரு சிறு பாடல் உண்டு. அந்த நாளில் டென்னசியிலுள்ள சாட்டானுகாவில் நான் சந்தித்தது என் நினைவுக்கு வருகிறது. அது சாட்டானுகாவில் அல்ல, மெம்பீஸில். அங்குதான் அங்குநின்று கொண்டிருந்த அந்த கறுப்பு நிற ஸ்திரீயை நான் சந்தித்தேன், உங்களுக்குத் தெரியும். அதைக் குறித்து நான் கூறியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவளுடைய மகன் பெண் சம்பந்தமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். அவள் இந்த பையனுடைய ஷர்ட்டை தலையில் கட்டிக் கொண்டு, 'பென்ச்'சின் (bench) மேல் இப்படி சாய்ந்து கொண்டிருந்தாள். கர்த்தர் அந்த விமானத்தை நிறுத்திவிட்டு அதை எப்படியோ போகவிடவில்லை அவர்கள் என்னிடம்... பரிசுத்த ஆவி என்னிடம், “இந்த வழியாக நடந்து போ” என்றார். நான் அந்த வழியாக பாடிக் கொண்டே நடந்து சென்றேன். “என் விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு நேரமாகிவிட்டது” என்று நினைத்தேன். அவரோ, “நடந்து கொண்டேயிரு, போய்க் கொண்டேயிரு, போய்க் கொண்டேயிரு” என்றார். அது என் ஊழியத்தின் துவக்கத்தில். 98 நான் பார்த்த போது, அங்கு ஒரு சிறு குடில் இருந்தது. அதன் வேலியின் மேல் சாய்ந்த வண்ணமாக, ஒரு கறுப்பு நிற சகோதரி நின்று கொண்டிருந்தாள். ஓ, அவள்... “ஆண்டி ஜெமீமா பான்கேக்” மேல் போடப்பட்டிருக்கும் ஸ்திரீகளில் ஒருவளைப் போல அவள் காணப்பட்டாள் பெரிய தடித்த கன்னங்கள், அவளுடைய தலைமயிர் , அவளுடைய ஷர்ட் பின்பாகத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. அவள் கதவின் மேல் இப்படி சார்ந்து கொண்டிருந்தாள். நான் அந்த சிறு பாடலைப் பாடிக் கொண்டே... அது என்ன... நான் பாடின அந்த சிறு பாடலின் பெயரை மறந்துவிட்டேன். அது ஒருவகையான குதூகலமான பெந்தெகொஸ்தே பாடல். நான் பாடி முடித்த போது, அவளை நெருங்கிவிட்டேன். நான் அருகில் சென்றேன். அவள் தன்தடித்த கன்னங்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாள். அவளை நான் கட்டித் தழுவ விரும்பினேன். அவள், “காலை வணக்கம், பார்சன்” என்றாள். நான், “ஆண்டி (Auntie), என்ன சொன்னீர்கள்?” என்றேன். அவள், “காலை வணக்கம், பார்சன்” என்றாள். “நான் பார்சன் (அதாவது போதகர் - தமிழாக்கியோன்) என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அவள், “நீர் வருவீர் என்று எனக்குத் தெரியும்” என்றாள். “நான் வருவேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று சொன்னேன். (நான் நினைத்தேன், “ஊ - ஓ, இதைப் பார்” என்று). அவள், “ஆம், ஐயா. சூனேமியாளைக் குறித்து நீங்கள் எப்பொழுதாகிலும் வேதத்தில் படித்ததுண்டா, பார்சன்?” என்றாள். நான், “ஆம் ஆண்டி, அதைப் படித்திருக்கிறேன்” என்றேன். அவள், “நான் அவ்வகையான ஸ்திரீயே. ஒரு குழந்தையைத் தரும்படி நான் கர்த்தரிடம் கேட்டேன் - நானும் என் கணவரும். எனக்கு குழந்தையை அவர் தந்தால், அவருக்காக அவனை வளர்ப்பேன் என்று பிரதிக்ஞை செய்தேன், அவர் எனக்கு குழந்தையைத் தந்தார். அவனை நான் வளர்த்து வந்தேன். அருமையான பையன். ஆனால் அவன் தவறான கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டான், பார்சன். இப்பொழுது அவனுக்கு அந்த பயங்கரமான வியாதி பீடித்துக் கொண்டது. இரண்டு நாட்களாக அவன் மரணத்தருவாயிலிருக்கிறான். இரண்டு நாட்களாக அவனுக்கு சுயநினைவு இல்லை. டாக்டர் இங்கு வந்திருந்தார். அவன் பிழைக்க மாட்டான், மரித்துப் போவான் என்று கூறிவிட்டார். அது சமூக வியாதி. என் மகன் மரிப்பதைப் பார்க்க எனக்கு சகிக்கவில்லை. நான் இரவு முழுவதும் ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான், ”ஆண்டவரே, இப்படிப்பட்டவள் தான் அந்த சூனேமியாளும் கூட, உமது எலிசா எங்கே? என்றேன்“ என்றாள். 99 அவள் தொடர்ந்து. “நான் உறங்கச் சென்ற போது, ஒரு கனவு கண்டேன். அதில் நான் இந்த கதவின் அருகில் நின்று கொண்டிருந்தேன். நீர் ஒரு சிறு தொப்பியை தலையின் பக்கவாட்டில் அணிந்து கொண்டு இந்த தெருவின் வழியாக வரக் கண்டேன். ஒன்றே ஒன்றுதான் காணவில்லை. எங்கே அந்த... உமது கையில் ஒரு பெட்டி இருக்க வேண்டுமே” என்றாள். “அதை நான் பீபாடி ஓட்டலில் வைத்துவிட்டேன்” என்றேன். “உம்மிடம் ஒரு பெட்டி இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என் மகன் மரித்துக் கொண்டிருக்கிறான்” என்றாள். “என் பெயர் பிரான்ஹாம்” என்றேன். “பார்சன் பிரான்ஹாம், உம்மை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி”, என்றாள். “நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பவன், என் ஊழியத்தைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றேன். “கேள்விப்பட்டதில்லை என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “உள்ளே வருவீர்களா?” என்று அழைத்தாள். நான். உள்ளே நடந்து சென்றேன். பெரிய உருவம் படைத்த அந்த பையன் அங்கு படுத்துக் கொண்டிருந்தான். அவளிடம் நான் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து கூற முயன்றேன். அதில் அவளுக்கு சிரத்தையே இல்லை. அவள் விரும்பினதெல்லாம், அந்தப் பையன் இரட்சிக்கப்பட்டு போக ஆயத்தமாயிருக்கிறான் என்று அவன் கூறுவதைக் கேட்கவே. அவள் சொன்னாள், தேவன் அவனை இரட்சித்தார். ஒரு வருடம் கழித்து அவனை, சிவப்பு தொப்பி அணிந்த சுமையாளாக ரயிலடியில் கண்டேன் தேவன் எவ்விதம் காரியங்களை நடத்துகிறார்! அந்த சம்பவம் நடந்த பிறகு, அங்கிருந்த நான் திரும்பி வந்த போது... விமானம் ஏழு மணிக்கு புறப்பட வேண் டியதாயிருந்தது ஆனால் மணி ஒன்பதரை ஆகிவிட்டது. நான் வாடகை கார் எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு சென்றேன். நான் உள்ளே நுழைந்த போது, “இன்னின்ன என் விமானம் புறப்பாடுக்கு இதுவே கடைசி அழைப்பு” என்று அறிவிக்கப்பட்டது. நான் சென்று அந்தப் பையனுக்காக ஜெபித்த வேளையில், கர்த்தர் அந்த விமானம் புறப்படாமல் தரையிலே இருக்கும்படி நிறுத்தி வைத்தார். பாருங்கள்? அதுதான். 100 அந்த சிறு பாடல் என்னவென்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். “அவர்களில் ஒருவன்”அதுதான். ஓ, நாங்கள் வட்டமாக நின்று கொண்டு, கை கொட்டி அதைப் பாடுவது வழக்கம்: அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே அவர்கள் மேலறையில் கூடி அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று ஊழியத்துக்காக வல்லமை வந்தது அன்று அவர்களுக்கு அவர் செய்ததையே உனக்கும் செய்திடுவார் அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூறமுடிந்ததால் எனக்கானந்தமே 101 இந்த சரணத்தைக் கேளுங்கள்: இந்த ஜனங்கள் கல்லாதவராயினும் உலகப் புகழ் அற்றவர் ஆனாலும் அவர்கள் அனைவரும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று பெந்தெகொஸ்தேவைப் பெற்றுள்ளனர் அவருடைய வல்லமை மாறவில்லை என்று தூரத்திலும் எல்லாவிடங்களிலும் அறிவிக்கின்றனர் அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், ஓ, நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூறமுடிந்ததால் எனக்கானந்தமே. ஓ, என் சகோதரனே, இவ்வாசீர்வாதத்தை நாடிவா அது உன் இருதயத்தை பாவத்தினின்று சுத்திகரிக்கும் அது மகிழ்ச்சியின் மணி ஒலிக்கச் செய்யும் உன் ஆத்துமா கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ஒ , என் இருதயத்தின் ஆழத்தில் அது எரிந்து கொண்டிருக்கிறது ஒ, அவருடைய நாமத்துக்கு மகிமை! அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே (உங்களுக்கும் அது ஆனந்தத்தை தருகிறதா?) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே. 102 ஓ, நீங்கள் ஆனந்தமாயிருக்கிறீர்கள் அல்லவா? இதை நாம் பாடும்போது, ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். என்ன சொல்லுகிறீர்கள்? அதை நாம் செய்வோம். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே. ஓ, என் சகோதரனே, இவ்வாசீர்வாதத்தை நாடி வா அது உன் இருதயத்தை பாவத்தினின்று சுத்திகரிக்கும் அது மகிழ்ச்சியின் மணி ஒலிக்கச் செய்யும் உன் ஆத்துமா கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ஓ, என் இருதயத்துக்குள் அது எரிந்து கொண்டிருக்கிறது ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை! (நாம் கைகளை உயர்த்துவோம்). அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே நாம் எல்லாரும் சேர்ந்து பாடுவோம். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே. 103 இதை மறுபடியும் கூர்ந்து கேளுங்கள், பாருங்கள்: இந்த ஜனங்கள் கல்லாதவராயினும் (அவர்களுக்கு கல்லூரிபடிப்பு கிடையாது) உலகப் புகழ் அற்றவர் ஆனாலும் அவர்கள் அனைவரும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று பெந்தெகொஸ்தேயைப் பெற்றுள்ளனர் அவருடைய வல்லமை மாறவில்லை என்று தூரத்திலும் எல்லாவிடங்களிலும் அறிவிக்கின்றனர் (ஒவ்வொரு மூலையிலும் முட்டிலும்) அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே ஓ, இதைப் பாடுங்கள் சபையே. அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே. இப்பொழுது உங்கள் கைகுட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே ஒ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆமென்! நாம் சிறு பிள்ளைகளைப் போல. நமக்கு எந்த சம்பிரதாயமும் கிடையாது. தேவன் உருவில்லாதவர். அது சரியா? ஆம் ஐயா. அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், ஓ, அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கானந்தமே. 104 அதை கூற முடிந்ததற்காக நீங்கள் உண்மையில் ஆனந்தமாயிருக்கிறீர்களா? உங்கள் கரங்களையுயர்த்தி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுங்கள். (சகோ. பிரான்ஹாமும் சபையாரும் ஒன்று சேர்ந்து “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்கின்றனர் - ஆசி). அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தம்! அவ்விதம் இருக்க எனக்கு மகிழ்ச்சி. கர்த்தராகிய தேவனே, நான் மிகவும் ஆனந்தமாயிருக்கிறேன். அவர்களில் ஒருவன்! அவர்களில் ஒருவன்! அவர்களில் நானும் ஒருவன் எனக் கூற முடிந்ததால் எனக்கு மிகுந்த ஆனந்தம். ஓ தேவனே, அவ்விதம் இருக்க எங்களுக்கு உதவி புரியும். நாங்கள் சீயோனை நோக்கி அணி வகுத்து சென்று கொண்டிருக்கையில், கர்த்தாவே, எங்கள் வெளிச்சம் பிரகாசித்து கொண்டிருக்க உதவி செய்யும். பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் எங்கள் வாழ்க்கையை உமது சேவைக்கென்று அளிக்கிறோம். ஆமென். ஆமென். ஓ, நாம் சீயோனுக்கு அணி வகுத்து செல்கிறோம் ஓ, அழகான, அழகான சீயோனுக்கு நாம் அணிவகுத்து சீயோனுக்கு மேல் நோக்கி செல்கிறோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு கர்த்தரில் அன்பு கூருகிறவர்களே வாருங்கள் நமது ஆனந்த களிப்பை தெரியப்படுத்துவோம் இனிமையான உடன்பாடுடன் பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள் இவ்விதம் சிங்காசனத்தை சூழ்ந்து கொண்டு இவ்விதம்.... (ஓ, ஆவியில் பாடுங்கள்!) ஓ, நாம் சீயோனுக்கு அணி வகுத்து செல்கிறோம் ஓ, அழகான, அழகான சீயோனுக்கு நாம் அணிவகுத்து சீயோனுக்கு மேல் நோக்கி செல்கிறோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு. ஓ, நாம் சீயோனுக்கு அணி வகுத்து செல்கிறோம் ஓ, அழகான, அழகான சீயோனுக்கு நாம் அணிவகுத்து சீயோனுக்கு மேல் நோக்கி செல்கிறோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு. நம்முடைய தேவனை அறிந்திராதவர்கள் பாடுவதற்கு மறுக்கட்டும் ஆனால் பரலோக ராஜாவின் பிள்ளைகள் ஆனால் பரலோக ராஜாவின் பிள்ளைகள் தங்கள் ஆனந்த களிப்பை வெளியே பேசட்டும் தங்கள் ஆனந்த களிப்பை வெளியே பேசட்டும் நாம் பாடுவோம். நாம் சீயோனுக்கு அணி வகுத்து செல்கிறோம் ஓ, அழகான, அழகான சீயோனுக்கு நாம் அணிவகுத்து சீயோனுக்கு மேல் நோக்கி செல்கிறோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு 105 ஓ, அது உங்களை சுத்தப்படுத்தவில்லையா? அந்த பழைய பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமல்லவா?மற்றெல்லாவற்றைக் காட்டிலும்... இப்பொழுது நாம் பெற்றுள்ள மற்ற விதமான பாடல்களைக் காட்டிலும் இவைகளே எனக்கு பிரியம். இந்த இருதயத்தைத் தொடும் பழைய பாடல்கள் மிகவும் நல்லவை. ஓ, என்னே! அவைகளைப் பாடும் போது எனக்கு நல்லுணர்வும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. என்னே, களி கூர வேண்டும் என்று தோன்றுகிறது. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் சஞ்சலமும் உள்ள பிள்ளையே அது உனக்கு களிப்பும் ஆறுதலும் அளிக்கும் ஓ, நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாம் (விலையுயர்ந்த நாமம்), ஒ என்ன இனிமை! (ஓ, என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலாகத்தின் மகிழ்ச்சியுமாம் இப்பொழுது நாம் தலைகளை வணங்குவோம்: இயேசுவின் நாமத்துக்கு தலை வணங்கி அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமது யாத்திரை முடியும் போது அவரை ராஜாதி ராஜாவாய் முடி சூட்டுவோம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும்... (சகோ. நெவில் ஆராதனையை முடிக்கிறார் - ஆசி).